Friday, May 9, 2014

வீரமும் பெருமையும்- லுக்மான் (அலை) அவர்களின் அறிவுரை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.......


கண்ணியம் அ(ந்த இறை)வனுடைய கீழாடையாகும். பெருமை அவனுடைய மேலாடையாகும். (அல்லாஹ் கூறினான்:) ஆகவே (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வதைத்து விடுவேன். என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ ரலியல்லாஹு அன்ஹுஅபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5114)


நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? தற்பெருமையும்ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான். என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹாரிஸா இப்னு வஹப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தற்பெருமையும்ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் நரகவாதியே!


16:22. உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்எனவேஎவர்கள் மறுமையை நம்பவில்லையோஅவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள்.


16:23. சந்தேகமின்றி அல்லாஹ்அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்நிச்சயமாக அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.
 

16:29. “ஆகவேநீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்துஅங்கே என்றென்றும் தங்கியிருங்கள்” (என்றும் மலக்குகள் கூறுவார்கள்ஆணவங் கொண்டு) பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.

இறையச்சம் எவரிடத்தில் இல்லையோ அவரே முறையற்ற வழிகளில் பொருளாதாரத்தை ஈட்டி அவற்றை முறையற்ற வழிகளிலும் செலவிடுகின்றார். அதனால்  தீயபண்புகள் குடிகொண்டு விடுகின்றது.
28:83 ''பூமியில் ஆணவத்தையும்குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.'' 

நபித்தோழரின் வாழ்க்கையில் ஓர் நாள்

அப்துல்ரஹ்மான் பின் அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகப்பெரும் செல்வந்தரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 பேரில் ஒருவருமாவார் அவரின் வணிகக் கூட்டம் நகருக்குள் வரும் பொழுது நகரேக் குலுங்கும் அப்படிப்பட்ட செல்வந்தர் பல வேளைகளில் தங்களுடைய தோழர் முஸ்அப் பின் உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அடக்கம் செய்யப்பட்டப் பொழுது போதாத கஃபன் துணியை காலுக்கும் தலைக்கும் இழுத்து கடைசியில் இலைகளை கூடுதலாக வைத்து அடக்கம் செய்த வறுமை நிலையை நினைத்து அழுவார்களாம். உயர் தர உணவு வகைகள் அவருக்கு முன் வைக்கப்பட்டால் கடந்த காலத்தில் இஸ்லாமிய வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உணவுக்குக் கூட வழியில்லாமல் வாடிய நபித் தோழர்களை நினைத்து அழுவார்களாம்.



நபித்தோழர் அப்துல்ரஹ்மான் பின் அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அவர்களிடம் குவிந்து கிடந்த செல்வம் தடம் புரளச் செய்யாததற்கு எது காரணம்தான் கஷ்டப்படும்பொழுது தன்னுடன் நெருங்கிப் பழகிய தோழர்களின் நட்பை மறக்கடிக்கச் செய்யாததற்கு எது காரணம்?


அழகிய உபதேசம்.

லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள் மகனுக்கு செய்த உபதேசம் உலகம் முடியும் காலம் வரை உலக மக்கள் அனைவரும் பின்பற்றியொழுகக் கூடிய சிறப்பான உபதேசமாகும்.

அல்லாஹ்வை மட்டும் வணங்குஅல்லாஹ்வுக்கு இணைவைக்காதேசகமனிதர்களைப் பார்த்து முகத்தை திருப்பாதேபெருமை அடிக்காதேகர்வம் கொள்ளாதேசப்தத்தை உயர்த்தாதேநடையில் நடுநிலையை பேணு.

இதில் எந்த ஒன்று எவரிடத்தில் இல்லையோ அவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்மாறாக வெறுப்பான் என்று முத்தாய்ப்பான உபதேசங்களைக் கூறினார்கள்.
  وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். 31:18
 وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ
''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்).  31:19

மனிதர்களில் சிலர் இப்படியும் பிற்காலத்தில் தோன்றுவார்கள் என்பதை நன்கறிந்த இறைவன் தன் தூதர் லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக அவர்களின் மகனுக்கு மேற்காணும் அறிவுரைகளை கூறச் செய்து அதை முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கி அருளிய இறுதி வேதம் திருமறைக்குர்ஆனிலும் இடம் பெறச் செய்தான்.

நரகவாசிகள்

இந்த பிரபஞ்சத்தை படைத்து அதில் உயிரினங்களை தோற்றுவித்து அவைகள் உண்டு புசித்து களைப்பாறுவதற்கு ஏற்றாற்போல் இந்த பூமியை வடிவமைத்துக் கொடுத்த சர்வ வல்லமை பொறுந்திய இறைவன் ஒருவன் மட்டுமே பெருமைக்குரியவன்அவனல்லாது வேறு யாருக்கும் பெருமை வரக் கூடாது என்பதற்காக பெருமைவல்லமை இரண்டும் எனக்குரியது அதில் யாரும் போட்டி இடக் கூடாது என்று இறைவன் கூறுவதாகவும் மீறினால் அதற்கு தண்டனை நரகத்தைத் தவிற வேறில்லை என்று இறைவனின் இறுதித்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்து விட்டார்கள்.


நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா?தற்பெருமையும்ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான். என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹாரிஸா இப்னு வஹப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.



நானே உயர்ந்தவன் என்று இறைவனிடம் இப்லீஸ் தர்க்கம் செய்தக் காரணத்தால் தான் அவன் மீது இறைவன் கடும் கோபம் கொண்டு சிறுமை அடைந்தவனாக இங்கிருந்து வெளியேறு என்றுக் கூறி விரட்டினான்.



7:13''இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான். 


40:60. உங்கள் இறைவன் கூறுகிறான்: என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோஅவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

சொர்க்கமும் நரகமும் தம் இறைவனிடம் வாக்குவாதம் செய்தன. அப்போது சொர்க்கம், 'என் இறைவா! எனக்கென்ன ஆயிற்றுமக்களில் பலவீனர்களும் சாமானியர்களும் தானே எனக்குள் நுழைகிறார்கள்!என்று கேட்டது. நரகம் 'நான் தற்பெருமைக்காரர்களுக்கு மட்டுமே உரியவனாம் விட்டேனே!என்று முறையிட்டது. அப்போது அல்லாஹ் சொர்க்கத்திடம், 'நீ என்ன கருணை(யின் பரிசு) ஆவாய்என்று சொன்னான். நரகத்திடம் நீ நான் அளிக்கும் வேதனை ஆவாய். நான் விரும்புகிறவர்களை உன் மூலம் தண்டிக்கிறேன்'என்று சொல்லிவிட்டு -இரண்டையும் நோக்கி -'உங்கள் ஒவ்வொருவரையும் நிரப்புபவர்கள் (மக்களிடையே) உள்ளனர்என்று கூறுவான். 

மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கம் இருக்கிறதே (அதில் தகுதியானோர் நுழைவார்கள்). அல்லாஹ் தன் படைப்புகளில் யாரும் அநீதி இழைப்பதில்லை. அவன்தான் நாடியவர்களை நரகத்திற்காகப் படைக்கிறான். நரகத்தில் அவர்கள் போடப்படும்போது, 'இன்னும் இருக்கிறதா?' என அது மும்முறை கேட்கும். இறுதியில் இறைவன் அதில் தன்னுடைய பாதத்தை வைக்கஅது நிரம்பிவிடும்அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். போதும்;போதும்போதும் என அது கூறும். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைவன் பெருமையடிப்பவர்கள், கர்வம் கொள்பவர்கள் பற்றி அதிகமான இடங்களில் தனது திருமறையில் சொல்லுகிறான். அவர்கள் இறைவசனத்தை பொய்ப்பிபதில் பெருமை கொள்வார்கள். மேலும் அவர்களை தவறின் பால் விட்டுவிடுகின்றான் என்பதற்கு கீழுள்ள வசனங்கள் தக்க சான்றுகளாகும்.

7:40. எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.

7:146. எவ்வித நியாயமுமின்றிபூமியில் பெருமையடித்து நடப்பவர்களைஎன் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - ஆனால் தவறான வழியைக் கண்டால்அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்.

இறைவனின் பால் போரிட ஆரம்பகாலத்தில் பத்ரு யுத்தக்களத்திற்கு சென்ற ஸஹாபாக்களை வழிகெடுத்த அன்றைய மக்கத்து நயவஞ்சகர்களையும் ஷைத்தானின் செயல்களையும் பின் வருமாறு எடுத்துரைகிறான்;..

8:47. பெருமைக்காகவும்மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.

8:48ஷைத்தான் அவர்களுடைய (பாவச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, “இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லைமெய்யாக நான் உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!” என்று கூறினான்இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது அவன் புறங்காட்டிப் பின்சென்று, “மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன்நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கின்றேன்நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன்” என்று கூறினான்.  

இறைவசனத்தை நிராகரிப்பவனின் செயல்களையும் அவர்களின் நிலைகளைப்பற்றி ....

31:7. அ(த்தகைய)வனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால்அவன் அவற்றைக் கேட்காதவனைப் போல் - அவன் இரு காதுகளிலும் செவிட்டுத் தனம் இருப்பது போல்பெருமை கொண்டவனாகத் திரும்பி விடுகிறான்ஆகவே அவனுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டென்று (நபியே!) நீர் நற் செய்தி கூறுவீராக



39:60. அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?
 

 
39:72. “நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது.

40:35. “(இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமுமின்றிஅல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வதுஅல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும்இவ்வாறேபெருமையடித்து ஆணவம் கொள்ளும் ஒவ்வோர் இருதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்” (என்றும் அவர் கூறினார்)........


5789. நபி(ஸல்) அவர்கள்அல்லது 'அபுல் காசிம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
(முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 


46:20. அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், “உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம்வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், “ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும்வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால்இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

57:23. உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும்அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்)கர்வமுடையவர்கள்தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

4:36. மேலும்அல்லாஹ்வையே வழிபடுங்கள்;அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும்தாய் தந்தையர்க்கும்நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும்,ஏழைகளுக்கும்அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும்அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம்தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும்,வழிப்போக்கர்களுக்கும்உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராகவீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

இன்னும் லுக்மான் (அலை) தன் மகனுக்கு கூறிய அறிவுரையை நாமும் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.


31:13. இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதேநிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).



31:17. “என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாகநன்மையை ஏவிதீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாகஉனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக;நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.

எனவே நாம் பெருமைகொள்ளாமல் இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வோமாக, ஏனெனில் லுக்மான் அலை அவர்கள் தனது மகனுக்கு சொன்ன அறிவுரையை இறுதி வேத்ததில் இடம் பெறச்செய்து நாமும் படிப்பினை பெறுவதற்குத்தான். இன்னும் நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லைஎன்றும் இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்உன் கட்டளைகளுக்கு நாங்கள் வழிப்பட்டோம்எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்நாங்கள் மீளுவதும் உன்னிடமேதான்” என்ற பிரார்த்தனையுடன்.

No comments:

Post a Comment