Wednesday, May 14, 2014

    ஸஹாபாக்களின் அளவு கடந்த மரியாதை!
கலீபதுல் காதிரிமௌலவி பாஸில்ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி  பரேலவி)அவர்கள்
ஹஸரத் ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு பாதையால் நடந்து சென்றால் அப்பாதை முழுவதும் நறுமணம் கமழும்.
ஆதாரம் : தாரமிபைஹகீஅபூநுஐம்
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்கள் இல்லம் வந்து சைனித்தார்கள். அப்போது அவர்களுக்கு அதிகமாக வியர்த்தது. எனது தாய் ஒரு போத்தலைக் கொண்டுவந்து வியர்வையை போத்தலில் வடித்தார்கள். நபியவர்கள் விழித்ததும் உம்மு ஸுலைம் நீர் செய்தது என்னஎன்று கேட்டார்கள். உங்கள் வியர்வை எல்லா மணங்களையும் மிகைத்த வாசமாகும். அதானல் வாசம் பூச வடிக்கின்றேன் என்று நயமாக நவின்றார்கள்.
ஆதாரம் : முஸ்லிம்
ஹஸரத் அபூஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,
ஒருவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து எனது மகளுக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கின்றேன். அவளுக்கு மணம் பூச வாசனைத் திரவியம் இல்லை. தாங்கள் அதனைத் தந்துதவுமாறு வேண்டுகின்றேன் என்றார்.
பெரிய வாயுள்ள ஒரு போத்தலையும் ஒரு குச்சியையும் கொண்டு வருமாறு அம்மனிதரை நபியவர்கள் வேண்டினார்கள். அதனை அம்மனிதர் கொண்டுவந்து நபியவர்களிடம் கொடுத்தார். தங்களது முழங்கையிலிருந்து வடித்த வியர்வையை போத்தலில் நிறைத்துக் கொடுத்தார்கள். இதனை எடுத்துச்சென்று உனது மண மகளிடம் கொடுங்கள். குச்சியால் எடுத்துப் பூசிக் கொள்ளுமாறு கூறுங்கள் என்றார்கள்.
ஆதாரம் : அபூயஃலாதப்றானி, (அஸ்வத்)இப்னு அஸாகிர்
வியர்வை ஒரு மனிதனின் கழிவுப் பொருள். ஆனால்ஸஹாபாக்கள் நபியவர்களின் வியர்வையை வாசமாகக் கருதி பாசத்துடன் பாவித்தார்கள் என்றால் அது அன்னாரின் மீது அளவு கடந்த கண்ணியத்தை வெளிப்படுத்தினர் என்பதுதானே பொருள்!
குருதி
ஹஜரத் அபூஉமாமா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,
உஹது யுத்தத்தில் ஒரு தீயவன் திரு நபியவர்களுக்கு கல்லால் எறிந்தான். அதனால்நபியவர்களின் முபாறக்கான ஒரு பல் ஸஹீதானது. அதனால் வாயின் ஓரத்திலிருந்து குருதி வடிந்தது. ஹஸரத் அபூ சயிதுல் குத்ரிய் ரழியல்லாஹு அன்ஹுவின் தந்தை அபூஸினான் ரழியல்லாஹு அன்ஹு குருதியை உறிஞ்சிக் கொண்டிருந்தார்.
உறுஞ்சிய குருதியைத் துப்பி விடுமாறு குண நபிநாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூற அல்லாஹ்வின் மீது ஆணையாக! தாங்களின் குருதியை நிலத்தில் உமிழ மாட்டேன் என்று கூறிய பின் அதனை மென்றுவிட்டார். உலகத்தில் ஒரு சொர்க்கவாதியைப் பார்க்க விரும்பினால் இவரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவருக்கு சோபனம் சொன்னார்கள்.
ஆதாரம் : பைஹகிஸீறத்துன் நபவிய்யாபாகம் - 03பக்கம் - 228,
ஷிபா, - பாகம் -1பக்கம் - 161
ஹஸரத் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு நபியவர்களுக்கு இரத்தம் குத்தி எடுத்தார்கள். எடுத்த குருதியை எடுத்துச் சென்று எவர் பார்வையிலும் படாத இடத்தில் மறைத்து விடுமாறு நபியவர்கள் பணித்தார்கள். நான் அதனை எடுத்துச் சென்று மறைவிடத்தில் குடித்து விட்டேன்.
குருதியை என்ன செய்தீர்என்று கோமான் நபியவர்கள் அவரிடம் விசாரித்தார்கள். மனிதருக்கு மறைவாக உள்ள ஓர் இடத்தில் அதனை (பத்திரமாக) வைத்துள்ளேன் என்றார். குருதியைக் குடித்து விட்டீர்களாஎன்று நபியவர்கள் கேட்டார்கள். ஆமாம் நாயகமே! நான் அதனைக் குடித்து விட்டேன் என்றார். எதற்காகக் குடித்தீர்கள் என்று நபியவர்கள் கேட்டார்கள். தாங்கள் குருதியை நரகம் தீண்டாது என்பதை திட்டமாக நான் அறிந்திருந்தேன். அதன் பறக்கத்தால் என்னை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே குடித்தேன் என்று அடக்கத்துடன் விடை சொன்னதும்,
நரக நெருப்பு உம்மைத் தொடாது என்று கூறிய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் பாசத்தால் என் தலையை வருடினார்கள்.
ஆதாரம் : ஸீறத்துன் நபவிய்யாபாகம் - 03பக்கம் - 227 - 228
ஷறஹுஷிபாபாகம் - 1பக்கம் - 162
கோமான் நபியவர்களின் குருதியை குடித்த தினத்திலிருந்து வீரமரணம் அடையும்வரை ஹஸரத் இப்னு ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் திருவாயிலிருந்து கஸ்தூரி கமழ்ந்து கொண்டிருந்தது.
ஹஸரத் ஷுஃபி ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்,
பெருமானாரின் குருதியின் சுவை எப்படியிருந்ததுஎன்று இப்னு ஷுபைர் ரழியல்லாஹு அன்ஹுவிடம் ஸஹாபாக்கள் கேட்டார்கள். குருதி தேனைப் போன்று இனித்தது. கஸ்தூரி போன்று மணம் பரப்பியது என்று அவர் விடை பகர்ந்தார்.
ஆதாரம் : ழியாஉன்நபிபாகம் - 05பக்கம் - 499
சிறுநீர்
ஹஸரத் உம்மு ஐமன் ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள்இரவில் நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு ஈச்ச மரத்தினால் செய்யப்பட்ட பாத்திரத்தில் சிறுநீர் கழித்துவிட்டு உறங்கி விட்டார்கள்.
இரவில் நான் விழித்தேன். எனக்குத் தாகமாக இருந்தது. பாத்திரத்திலிருந்ததை (அது சிறுநீர் என்பது அவருக்குத் தெரியாது) குடித்துவிட்டேன். விடிந்ததும் விடயத்தை நபியவர்களிடம் கூறினேன். சிரித்தார்கள். இதன்பின் உன் வயிற்றில் எதுவித முறைப்பாடும் (வியாதியும்) வராது என்று நற்செய்தி கூறினார்கள்.
நூல் : ஹாக்கிம்ஹுஜ்ஜத்துல்லாஹில் ஆலமீன்பக்கம் - 688,
ஷறஹுஸ்ஸிபாபாகம் - 01பக்கம் - 162
ஹஸரத் இப்னு ஜுறைஜ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,
இரவில் நபியவர்கள் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழித்துவிட்டு அப்பாத்திரத்தை கட்டிலுக்குக் கீழ் வைப்பது வழக்கம். விடிந்ததும் பாத்திரம் வெறுமையாக இருப்பதைப் பார்த்துவிட்டு உம்முல் முஃமினீன் அன்னை உம்மு ஹபீபாவுடன் ஹபஷாவிலிருந்து கூடவே வந்திருந்த “பறக்கா“ என்ற பெண்ணிடம் பாத்திரத்திலிருந்த சிறுநீரை என்ன செய்தீர்கள் என்று நபியவர்கள் கேட்டார்கள். அதனைக் குடித்துவிட்டேன் என்று பறக்கா கூறினார்கள். உம்மு யூசுப் உமக்கு ஆரோக்கியம் கிடைத்துவிட்டது என்று கூறினார்கள். இதன் பின் பறக்காவுக்கு மரண நோயைத் தவிர்த்து வேறு எந்த நோயும் அணுகவே இல்லை.
ஆதாரம் : ஹுஜ்ஜத்துல்லாஹில் ஆலமீன்பக்கம் - 688
ஷறஹுஷிபாபாகம் - 01பக்கம் - 163
முடி
ஹஸரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்,
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (இறுதி ஹஜ்ஜின்போது) முஸ்தலிபாவில் தங்கிவிட்டு மினா வந்து ஜம்றதுல் அகபாவில் கல்லெறிந்த பின் குர்பானி கொடுத்துவிட்டு தனது இருப்பிடம் வந்தார்கள். பின் முடி மழிப்பவரை அழைத்து தனது வலது பாகத்தை மழிக்குமாறு பணித்தார்கள். பின்,
ஹஸரத் அபூதல்ஹா அன்சாரி ரழியல்லாஹு அன்ஹுவை அழைத்து மழித்த திருமுடியை தோழர்களுக்கு மத்தியில் பங்கீடு செய்யுமாறு பணித்தார்கள் பின் இடது பாகத்தை மழிக்கச் செய்து அதனையும் மக்களுக்கு மத்தியில் பங்கிடுமாறு ஹஸரத் அபூதல்ஹா ரழியல்லாஹு அன்ஹுவைப் பணித்தார்கள்.
ஆதாரம் : புகாரிமுஸ்லிம் ஷரீப்,
மிஷ்காத் பக்கம் - 232
ஹஸரத் முகம்மத் இப்னு ஸீரின் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்,
ஹஸரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹுவிடமிருந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஒரு திருமுடி எனக்குக் கிடைத்திருந்தது என்று ஹஜரத் உபைதா ரழியல்லாஹு அன்ஹுவிடம் கூறினேன். அதற்கு அவர் நபியவர்களின் ஒரு திருமுடி என்னிடமிருப்பது,உலகமும் உலகத்திலுள்ளவைகளை விடவும் எனக்கு மேலாகும் என்று கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி ஷரீப்பாகம் - 01பக்கம் - 26
ஹஸரத் அனஸ் இப்னு மாலிக் கூறுகின்றார்,
நாவிதர்நபிகள் நாயகத்தின் திருமுடியை மழித்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன். நபி மணித் தோழர்கள் நபியவர்களைச் சுற்றிக் கொண்டு திருநபியவர்களி்ன் ஒரு திருமுடியும் நிலத்தில் விழுந்து விடக் கூடாது என்பதற்காகவும்திருமுடி தங்கள் கரத்தில் விழவேண்டும் என்பதற்காகவும் போட்டி போட்டு கையேந்தி நின்றதைக் கண்டேன்.
ஆதாரம் : முஸ்லிம்பாகம் - 02பக்கம் - 256
ஹஸரத் உதுமான் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்,
எனது மனைவி நீருள்ள ஒரு பாத்திரத்தைத் தந்து உம்முல் முஃமினீன் அன்னை உம்மு ஸல்மாவிடம் அனுப்பி வைத்தார்கள். யாருக்காவது கண்திருஷ்டி ஏற்பட்டால் அல்லது வியாதி ஏற்பட்டால் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அன்னை உம்மு ஸல்மாவிடம் அனுப்பி வைப்பது எனது மனைவியின் வழக்கமாகும்.
அன்னை உம்மு ஸல்மா ரழியல்லாஹு அன்ஹாவிடம் நபியவர்களின் ஒரு திருமுடி இருந்தது. வெள்ளியினாலான ஒரு கிண்ணத்தில் அத்திருமுடி வைக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்து நீரில் கலக்கிவிட்டு அந்நீரை குடிக்கக் கொடுப்பார்கள். உடன் சுகம் கிடைக்கும்.
ஆதாரம் : புகாரி ஷரீப்
நூல் : மிஷ்காத்பக்கம் - 391
உமிழ் நீர்வுழுச் செய்த நீர்
ஹுதைபியா உடன்படிக்கையின்போது மக்கத்துக் குறைஷிகள் நபியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஹஸரத் உர்வதுப்னு மஸ்ஊத் (அப்போது அவர் இஸ்லாமாகவில்லை) அவர்களை அனுப்பி வைத்தனர். அவர் நபியவர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தியபின் அங்கு கண்டவைகளை குறைஷிகளிடம் இவ்வாறு விபரித்தார். 
“எனது சமூகமே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் கைஸர்கிஸ்றாநஜ்ஜாசி உள்ளிட்ட பெரும் பெரும் மன்னர்களிடமெல்லாம் தூதுவராகச் சென்றுள்ளேன். அல்லாஹ் மீது ஆணையாக! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அவர் தோழர்கள் கொடுக்கும் மரியாதை போன்ற ஒன்றை எந்த ஒரு மன்னர் அவையிலும் நான் கண்டதில்லை.
அல்லாஹ் மீது ஆணையாக! அவர் உமிழ்ந்தால் அது அவர் தோழர்களில் ஒருவரின் கரத்தில்தான் படிகின்றது. அதனை தனது உடலிலும் முகத்திலும் தேய்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர் ஒரு கட்டளை பிறப்பித்தால் விரைந்து செயல்படுகின்றனர். அவர் வுழுச் செய்தால் வுழுச் செய்த நீரை சண்டை பிடித்துப் பெற்று உடலில் தடவி்க் கொள்கின்றனர். அவர் பேசினால் அவர்களின் சப்தத்தை தாழ்த்தி செவிமடுக்கின்றனர். கண்ணியத்தின் நிமிர்த்தம் அவரை ஏறிட்டு அவர்கள் பார்ப்பதில்லை. உங்களுக்கு அவர் ஒரு நல்வழியைத்தான் கூறுகின்றார். அதனால் அவரை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்“
ஆதாரம் : புகாரி ஷரீப்
ஆடைகள்
ஹஸரத் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுவின் திருமகள் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹாவிடம் நபியவர்களின் ஒரு சாறன் இருந்தது. அதனைக் கழுவி நோயாளிகளுக்கு அந்நீரால் குளிப்பாட்டுவார்கள். சுகம் கிடைக்கும்.
ஆதாரம் : முஸ்லிம் ஷரீப்பாகம் - 02பக்கம்- 190
ஹஸரத் அமீர் முஆவியா ரழியல்லாஹு அன்ஹுவிடம் நபியவர்கள் பாவித்த சாறனும் ஜுப்பாவும் ஒரு போர்வை மற்றும் நபியவர்களின் திருமுடி நகம் உள்ளிட்டவைகள் இருந்தன. அவர்களின் மரண வேளையில் பின்வருமாறு வசிய்யத் செய்தார்கள்.
நபியவர்களின் ஜுப்பாவை எனக்கு கபன் செய்யுங்கள். போர்வையால் சுற்றுங்கள். அவர்களின் சாறனை உடுத்தாட்டுங்கள். சுஜூது செய்யும் உறுப்புக்களான நெற்றிவாய் உள்ளிட்ட உறுப்புக்களில் அன்னாரின் திருமுடியையும் நகத்தையும் வையுங்கள். கருணாகரனான அல்லாஹ்வின் பேரருளில் என்னை வையுங்கள்.
ஆதாரம் : மிர்காத்பாகம் - 05பக்கம் -638
வஹாபிகள் கூறுவதுபோன்று ஸஹாபாக்கள் நபியவர்களை சாதாரண மனிதனாக நோக்கவில்லை என்பதும்எல்லை போட்டு மரியாதை செய்யவுமில்லை என்பதும் மேற்கண்ட எடுத்துக் காட்டுகளின் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெரிகின்றதல்லவா?
உலகில் யாரும்எவருக்கும் வழங்காத அதிஉச்ச கண்ணியத்தை நபிமணித் தோழர்கள் நாயகத் திருமேனி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு முன் நேரில் செய்து அன்னாரின் அன்பையும் ஷபாஅத்தையும் இம்மை  மறுமை நற்பேற்றினையும்உடல் ஆரோக்கியத்தினையும் பெற்றிருக்கும்போது அளவோடுதான் அன்னாரை மதிக்க வேண்டும் என்று கூறுவது சுத்த நயவஞ்சகத் தன்மையில்லையா?நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அதிகம் நேசித்து எல்லைக்கு அப்பால் அன்னாரை கண்ணியப்படுத்தி மறுமையில் அன்னாரின் நேசர்கள் பட்டியலில் சேர்ந்திருந்திட வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக!
நன்றி : புஷ்றாஇதழ் - 05ஏப்ரல் - 2009

No comments:

Post a Comment