இறுதி நாளின் அடையாளங்கள்
ஹஜ்ரத் அபூ ஸயீதுனில் குத்ரி ரலியல்லாஹு அன்{ஹ அவர்கள் ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லா{ஹ அன்ஹு அவர்களைக் கொண்டு அறிவிக்கின்றனர்,
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எனது உம்மத்தில் பிரிவினையும், வேற்றுமையும் எழுதப்பட்ட ஒன்றாகும். அதன்படி ஒரு கூட்டம் வெளியாகும். அவர்களின் வெளித்தோற்றம் மற்றவர்களை கவரும். ஆற்றல் நிறைந்த அவர்களது பேச்சுக்கள் கேட்போருக்கு அவர்கள் மீது நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்கும். ஆனால் அவர்களின் நடத்தை கெட்டவைகளாகயிருக்கும். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களது தொண்டைக்குழிக்குக் கீழே இறங்காது. வில்லை விட்டுப் பாய்ந்து செல்லும் அம்பைப் போல் அவர்கள் தீனை(மார்க்கத்தை) விட்டு வெளியேறிவிடுவார்கள். எவ்வாறு வில்லை விட்டுச் சென்ற அம்பு வில்லுக்குத் திரும்பாதோ, அவ்வாறே தீனின் பால் திரும்புவது அவர்களுக்கு சாத்தியமாகாது. குணத்திலும், செய்கையிலும் மிக மோசமானவர்களாயிருப்பார்கள்.அவர்
கள் ஜனங்களை தீனின் பால் அழைப்பார்கள். ஆனால் தீனுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. யார் அவர்களுடன் போர் புரிவார்களோ, அவர்கள் இறைவனுடன் மிக நெருங்கியவர்களாகயிருப்பார்கள் என்று நபிகளார் சொல்ல அதற்கு தோழர்கள்,….. நாயகமே! அவர்களின் முக்கிய அடையாளமென்ன? என்று வினவிட,…. அதற்கு நபிகளார் அவர்களின் அடையாளம் மொட்டையடிப்பதாகும் என்று நவின்றனர்.
(ஆதாரம்: மிஷ்காத், பக்கம் 308)
அவர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மொட்டை அடித்தல் என்னும் நபிகளாரது வாக்கு நஜ்து தேசத்திற்கே முற்றிலும் பொருந்தும். ஏனெனில் அவர்கள் தம்மை பின்பற்றுவோரை மொட்டையடிக்கும்படி கூறுகின்றனர். நபிகளாரின் இவ்வடையாளக் குறிப்பு காரிஜிய்யாக்களிடமோ, வேறு எந்த கீழ்மட்டத்தாரிடமும் காணப்படவில்லை. இப்பழக்கம் வஹ்ஹாபிய நஜ்திகளிடம் மட்டுமே குறிக்கோளாக காணப்படுகிறது.
(ஆதாரம்: அல்புதுஹாதுல் இஸ்லாமிய்யா, பாகம் 2, பக்கம் 268
கடைசி காலத்தில் ஒரு கூட்டம் வரும். அவர்கள் சிறுவயதினராகவும், புத்தி குறைந்தவர்களுமாயிருப்பார்கள். எனதுபேச்சையும் எடுத்துப் பேசுவார்கள்.அவர்கள் திருக்குர் ஆனையும் ஓதுவார்கள். எனினும் அது அவர்களின் தொண்டையைத் தாண்டாது. வில்லை விட்டும் அம்பு புறப்படுவது போல் மார்க்கத்தை விட்டும் அவர்கள் புறப்படுவார்கள். நீங்கள் அவர்களைக் கண்டால் கொன்று விடுங்கள். அவர்களைக் கொல்பவர்களுக்கு அல்லாஹ்விடம் நற்கூலியுண்டு என நபி (ஸல்)அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: புஹாரி
அறிவிப்பு : அலீ (றழி)
No comments:
Post a Comment