Friday, May 16, 2014

          குவலயம் போற்றும் குத்புல் அக்தாப்
முஹ்யத்தீன் மௌலிதில் உள்ள ஹிகாயத்துக்களில் சிலவற்றுக்கான ஆதாரங்களை ஏற்கனவேமுஹ்யத்தீன் மௌலிது ஓர் ஆய்வு‘ என்ற தலைப்பினூடாகத் தந்துள்ளோம். அத்துடன்இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஆதார நூலான பஹ்ஜத்துல் அஸ்றார் பற்றி பஹ்ஜத்துல் அஸ்றார்‘ என்ற தலைப்பினூடாக அறியலாம். மற்றும் கௌதுல் அஃலம் அவர்களின் யதார்த்த நிலைகளையும்,முஹ்யத்தீன் மௌலிது பற்றிய எஞ்சிய குற்றச்சாற்றுக்களுக்கான விளக்கங்களையும் இதன் ஊடாக அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு தினம் கௌதுல் அஃலம் முஹ்யதீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது கடும் காற்று வீசிக்கொண்டிருந்தது. அது வேளை ஒரு பருந்து கீச்சிட்டவாறு பறந்து சென்றது. இது சபையோருக்கு ஒரு வித சலனத்தை ஏற்படுத்தியது. உடனே கௌதுல் அஃழம் அவர்கள்,
காற்றே! பருந்தின் தலையைப் பிடி! என்றார்கள். உடனே பருந்தின் தலை ஒரு பக்கமும் அதன் உடல் வேறு பக்கமுமாக கிடந்தது. கௌதுல் அஃழமவர்கள் ஆசனத்தை விட்டுமிறங்கி வந்து பருந்தை கையால் எடுத்தார்கள். மறு கையால் அதைத் தடவிக் கொண்டு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்’ என்று கூறினார்கள். உடனே உயிர் பெற்றுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அது பறந்து சென்றது.
ஒரு பெண்மணி கௌதுல் அஃழம் கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ் அவர்களது சமுகத்திற்கு வந்து,எனது மகனின் மனம் தங்கள் மீது அபார பற்றைக் கொண்டிருப்பதாகக் காண்கின்றேன். அதனால் அல்லாஹ்வுக்காகவும்தங்களுக்காகவும் தனது பொறுப்பிலிருந்து அவரை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்கின்றேன். என்று கூறி மகனை கௌதுல் அஃழமிடம் ஒப்படைத்தார்.
அவரைப் பொறுப்பேற்ற கௌதுல் அஃழம் அவர்கள் தீவிர பயிற்சியிலும்ஆத்மீக வழியிலான இறைவணக்க முறைகளையும் கற்றுக் கொடுத்து அதன்படி செயல்படுமாறு கட்டளையிட்டார்கள்.
ஒரு தினம் அவரின் தாய் மகனை பார்ப்பதற்கு அங்கு வந்தார். மகன் மெலிந்தும் பசியின் கொடுமையால் வெளிறி மஞ்சணித்தும்மேலும்வெறும் தொலிக் கோதுமை ரொட்டி மாத்திரம் உண்பதையும் கண்டார். மறுபுறம் கௌதுல் அஃழமவர்கள் பக்கம் சென்று பார்த்த போது சாப்பிட்ட கோழியின் எலும்புகள் ஒரு பாத்திரத்திலிருப்பதைக் கண்டார்.
யா செய்யிதி! நாயகமே! நீங்கள் கோழி சாப்பிடுகிறீர்கள்! எனது மகனோ வெறும் தொலிக் கோதுமையையே சாப்பிடுகின்றாரே என்று அத்தாய் கூறியதும்,
சாபிட்டு எச்சமாக பாத்திரத்திலிருந்த கோழி எலும்பில் கையை வைத்துஇத்து இறந்த எலும்புகளை உயிப்பிக்கும் அல்லாஹ்வின் உத்தரவுடன் எழும்பு என்றார்கள். கோழி உயிர்பெற்றெழுந்து நேரே நின்று கூவியது. உன் மகன் இந்த நிலைக்கு வந்தபின் அவர் விரும்பியதைச் சாப்பிடட்டும் என்று கூறினார்கள் கௌதுல் அஃழமவர்கள்.
ஆதாரம் : பஹ்ஜதுல் அஸ்றார்பக்கம் - 128
அஷ்ஷெய்கு அபூ அம்று உதுமான் அஸ்ஸரீபின் அஷ்ஷெய்கு அபூ முஹம்மதுஅப்துல் ஹக் அல் ஹரிமி ஆகிய இருவரும் பின்வரும் விடயத்தைக் கூறுகின்றனர்.
நாங்கள் ஷெய்கு முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் திருச்சபையில்ஹிஜ்ரி 555ஸபா - 3 ஞாயிறு அன்று இருந்தோம். ஷைய்கவர்கள் எழுந்து சென்று அவர்களின் மிதியடியிலிருந்து கொண்டு வுழுச் செய்தார்கள். பின் இரண்டு ரக்அத் தொழுதார்கள். தொழுது முடித்து ஸலாம் கூறியபின் பயங்கரமாக சப்தமிட்டார்கள். பின் மிதியடிகளில் ஒன்றை எடுத்து ஆகாயத்தில் வீசினார்கள். எமது பார்வை விட்டும் அது பறந்து சென்றது. பின் மீ்ண்டும் கூச்சலிட்டார்கள். மற்றைய மிதியடியை எடுத்து எறிந்தார்கள். அதுவும் எமது பார்வையை விட்டும் மறைந்தது. அதன் பின் இருக்கையில் வந்து அமர்ந்தார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்பதற்கு யாருக்கும் துணிவு இருக்கவில்லை.
இது நடந்து இருபத்து மூன்று நாட்களுக்கு பின் அஜமி பிரதேசத்திலிருந்து ஒரு கூட்டம் வந்தது. எங்களிடம் ஷைய்கவர்களுக்கான நேர்ச்சைப் பொருட்கள் இருக்கின்றன என்று அவ்வர்த்தக கூட்டம் கூறியதும்ஷைய்கவர்களிடம் இது பற்றி அனுமதி கேட்டோம். அனுமதி வழங்கினார்கள். 
ஹரீர் பட்டும்பட்டுப் புடைவைகள்தங்கம் அந்த நாள் ஷெய்கவர்கள் வீசிய மிதியடி உட்பட இவற்றை எம்மிடம் கையளித்தனர். இந்த மிதியடி உங்களுக்கு எப்படி கிடைத்ததுஎன்று அவர்களிடம் வினவினோம். அவர்கள் தங்கள் கதையை விபரித்தனர்.
ஸபர் மூன்றாம் நாள் நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம். அறபு நாட்டு முன்னணிக் கொள்ளைக் கூட்டம் திடீரென எம்மைத் தாக்கி எமது பொருட்களை சூறையாடியும்எங்களில் சிலரை கொன்றும் வெறியாட்டம் ஆடின. பின் ஒரு ஓடையருகே உட்கார்ந்து கொண்டு சூறையாடி எமது பொருட்களை பங்கீடு செய்து கொண்டிருந்தனர். நாங்கள் ஓடையின் மறு கரையில் ஒதுங்கி நின்றோம்.
இச்சந்தர்ப்பத்தில் ஷைய்கவர்களை நாம் நினைத்துக் கொண்டு இதில் நாம் பாதுகாக்கப்பட்டால் அவர்களுக்கு நமது உடமைகளில் சிலதை நேர்ந்து கொள்வோம் என்று கூறினோம். இப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பாரிய இரு சப்தத்தைக் கேட்டோம். இச்சத்தம் ஓடையை நிறைத்து நின்றது. கொள்ளையர்கள் பதற்றப்பட்டவர்களாக நின்றதை நாங்கள் கண்டோம். மற்றுமொரு அறபுக் கொள்ளையர் கூட்டம் வந்துவிட்டதோ என்று நாம் அஞ்சினோம். அப்போது கொள்ளையர்களில் சிலர் எம்மிடம் வந்து,உங்கள் உடமைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்! எங்களுக்கு நேர்ந்த கதியை வந்து பாருங்கள் என்றனர். பின்எங்களை அழைத்துச் சென்று அவர்களின் இரு தலைவர்களையும் காட்டினர். அவ்விருவரும் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நனைந்த மிதியடிகள் இரண்டு காணப்பட்டன. பின் எங்களின் அனைத்து சாமான்களையும் திருப்பித் தந்துவிட்டுஇது ஒரு பாரதூரமான விடயம் என்று கூறிவிட்டு நகர்ந்தனர்.

ஆதாரம் : பஹ்ஜத்துல் அஸ்றார்பக்கம் - 132
அஷ்ஷெய்கு அபுல் அப்பாஸ் கூறுகின்றார் எங்கள் குருநாதர் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களோடு பக்தாதிலுள்ள அவர்களின் மத்தரஸாவில் ஓர் இரவு தங்கியிருந்தோம். அப்போது கலீபா அல் முஸ்தன்ஜித் பில்லாஹ் அபுல் முழப்பர் யூஸுப் அங்கு வந்தார். கௌது நாயகமவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டுஉபதேசம் புரியுமாறு வேண்டினார். அத்தோடு பத்து பொதிகளையும் அவர்கள் முன் வைத்தார். இதனை பத்து அடிமைகள் சுமந்து வந்தனர்.
இது எனக்குத் தேவையில்லை  என்று கூறிஅதனை ஏற்க மறுத்தனர், கௌதுல் அஃழம் அவர்கள் கலீபா அதனை ஏற்குமாறு கெஞ்சினார். மன்றாடினார். கௌதுல் அஃழம் அவர்கள் அதனை ஏற்கவில்லை. பின் அப்அபாதிகளில் ஒன்றை வலக் கையாலும், மற்றையதை இடது கையாலும் எடுத்து நசுக்கினார்கள். அதிலிருந்து குருதி வடிந்தது.
கலீபாவைப் பார்த்து, அபூ முழப்பர்! நீர் அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா? மக்களின் குருதியை என்முன் கொண்டு வந்துள்ளீர், என்றதும் கலீபா மூர்ச்சையானார். அல்லாஹ் மீது ஆணையாக! றஸூலே கரீம்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடனான தொடர்பு இல்லாதிருந்தால், இக்குருதியை அவர் மாளிகைவரை ஓடச் செய்திருப்பேன்.
அஷ்ஷெய்கு அபுல் அப்பாஸ் மீண்டும் மீட்டுகின்றார். ஒரு தினம் கலீபா அபுல் முழப்பர் கௌதுல் அஃழம் அவர்களின் அவைக்கு வந்து, தங்களிடமிருந்து ஒரு கறாமத்தை நேரில் பார்க்க ஆசைப்படுகின்றேன். அதனால் என் மனம் சாந்தி அடையும் என்று கூறினார். நீர் விரும்பும் கறாமத் எது? என்று கௌதுல் அஃழம் அவர்கள் கேட்டார்கள்.
மறைவான புறத்திலிருந்து அப்பிள் வருவதை விரும்புகின்றேன் என்றார். அப்போது ஈராக்கில் அப்பிள் இல்லாத காலமாகும். கௌதுல் அஃழம் அவர்கள் ஆகாயத்தை நோக்கி கையை உயர்த்தினார்கள். இரு அப்பிள்கள் அவர்கள் கைக்குள் வந்தன. ஒன்றை கௌதுல் அஃழம் அவர்கள் வெட்டினார்கள். அது வெண்மையாகவும், கஸ்தூரி மனமும் கமழ்ந்தது. மற்றையதை கலீபா அவர்கள் வெட்டினார்கள். அதற்குள் புழுக்கள் நிறைந்திருந்தன. இது என்ன ஆச்சரியம்! நீங்கள் வெட்டியது வெண்மையாகவும், கஸ்தூரி கமழக் கூடியதாகவும் உள்ளது. நான் வெட்டியது இப்படி இருக்கின்றதே, என்றதும், அபூ முழப்பரே! அநியாயக்காரர்களின் கை பட்டதனால் உமது பழத்தில் புழுக்கள் நிறைந்துள்ளன என்று கௌதுல் அஃலம் அவர்கள் இடித்துச் சொன்னார்கள்.

ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்றார், பக்கம் - 120,121
அஷ்ஷெய்கு அல் இம்றான் அல் கீமாதி, அஷ்ஷெய்கு பஸ்ஸார் ஆகிய இருவரும் பக்தாதில் வைத்து ஹிஜ்ரி  571இல் பின்வரும் விடயத்தைக் கூறியதாக அபுல் ஹஸன் என்பவர் உரைக்கின்றார்.
தங்களுக்கு முஹ்யத்தீன் என்று புனைப் பெயர் வரக் காரணம் என்ன? என்று கேட்கப்பட்டதற்கு...
ஹிஜ்ரி 511இல் வெள்ளிக்கிழமையன்று எனது சில துறவு நிலையிலிருந்து மீண்டு, நான்வெறுங் காலுடன் பக்தாதுக்கு வந்தேன். நிறம் மாறிய, மெலிந்த ஒரு நோயாளி அருகே நான் சென்றேன். அவர் அப்துல் காதிரே! என்று விளித்து எனக்குச் ஸலாம் கூறினார். நானும் அவருக்கு பதில் கூறினேன். என்னை அருகில் வருமாறு அழைத்தார். நெருங்கினேன். என்னை இருப்பாட்டும் என்றார். இருப்பாட்டினேன். உடனே அவரின் தேகம் வளர்ந்தது. கோலமும் பொலிவுற்றது. நிறமும் தெளிந்தது. நான் சற்று அஞ்சினேன். அப்போது அவர் என்னைத் தெரியுமா? என்று கேட்டார். தெரியாது என்றேன். அதற்கு அவர் நான் தான் தீன் சன்மார்க்கம்! நீர் பார்த்தது போன்று பங்கறையாக இருந்தேன். உம்மால் அல்லாஹ் என்னைச் உயிராக்கினான். நீர் முஹ்யத்தீன் மார்க்கத்தை உயிர்ப்பித்தவர். என்றார். நான் அவரை விட்டுப் பிரிந்து ஜாமிஆ மஸ்ஜித்துக்குச் சென்றேன். ஒருவர் என்னை சந்தித்தார். ஒரு செருப்பை எனக்கு முன் வைத்தார் பின் யா செய்யிதி! நாயகமே! முஹ்யத்தீன் என்றார்.
தொழுது முடிந்த பின், மக்கள் திரண்டு என்னிடம் வந்து, எனது இரு கரத்தையும் முத்தமிட்டனர். பின் யா முஹ்யத்தீன் என்று கோஷமிட்டனர். இது நாளிலிருந்து இப்பெயரால் அழைக்கப்படுகின்றேன்என்று  கௌதுல் அஃழமவர்கள் கூறினார்கள்.
                                                                                                 
                                                                 ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்ரார் பக்கம் - 109

கௌதுல் அஃழம் அவர்கள் தாயார் இப்படிக் கூறுகின்றார்.
எனது மகன் அப்துல் காதிரை ரமழானில் பெற்றெடுத்தேன். அவர் ரமழானில் பகல் வேளைகளில் ஒரு போதும் பால் அருந்தியதில்லை. ரமழானின் தலைப்பிறையைக் காண மேகக் கூட்டம் நிறைந்ததும், என்னிடம் வந்து தலைப்பிறை பற்றி மக்கள் விசாரித்தனர். அதற்கு இன்று எனது மகன் மார்பில் பால் அருந்தவில்லைஎன்று விடை பகர்ந்தேன்என்றார்கள். பின் அன்றுதான் ரமழானின் முதல் நாள் என்று தெளிவாகியது.

ஆதாரம்: பஹ்ஜத்துல் அஸ்ரார், பக்கம் -172
அஷ்ஷெய்கு அபுல் காஸிம் உமர் பின் மஷ்ஊத் அல்பஸ்ஸார், அஷ்ஷெய்கு அபூஹப்ஸ் உமர் கீமாத்தி ஆகிய இருவரும் பக்தாத்தில் ஹிஜ்ரி 591இல் பின்வரும் விடயத்தை தெரிவிக்கின்றனர்.
எங்கள் குருநாதர் அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சபையில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்களின் தலைக்கு மேலால் ஆகாயத்தில் பறந்து செல்வார்கள். பின் கூறினார்கள்.
கதிரவன் எனக்கு ஸலாம் கூறாமல் உதிப்பதில்லை. வருடம் என்னிடம் வந்து எனக்கு ஸலாம் கூறிவிட்டு அந்த வருடத்தில் நடப்பவற்றை எனக்கு எடுத்துக் கூறும். மாதம் என்னிடம் வந்து எனக்கு ஸலாம் உரைத்தபின் அம்மாதத்தில் நடப்பவை பற்றி எனக்கு எடுத்தோதும். வாரமும் என்னிடம் வந்து எனக்கு ஸலாம் கூறியபின் அவ்வாரத்தில் நடப்பவை பற்றி எனக்குத் தெரிவிக்கும். தினமும் என்னிடம் வந்து எனக்கு ஸலாம் உரைத்தபின்  அத்தினத்தில் நடப்பவை பற்றி செய்தி சொல்லும்.
அல்லாஹ்வின் மகத்துவத்தின் மீது ஆணையாக! சீதேவிகளும், மூதேவிகளும் என் கண்முன்னே லௌஹுல் மஃபூல் ஏட்டில் பதியப்பட்டிருக்கின்றன. நான் அல்லாஹ்வின் அறிவினதும், முஷாஹதாவினதும் கடலில் முங்கி எழுபவனாகும். உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்விடத்தில் ஓர் ஆதாரமாகத் திகழ்கின்றேன். றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிரதிநிதியாகவும் நான் விளங்குகின்றேன்.

ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்ரார், பக்கம் - 50
அஷ்ஷெய்கு ஷிஹாபுத்தீன் அபூஹப்ஸ் உமர்பின் அப்துல்லாஹ் ஸுஹ்ரவர்தி அவர்கள் பக்தாத்தில் வைத்து ஹிஜ்ரி 624இல் கூறுகின்றார். அஷ்ஷெய்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களின் மத்ரஸாவில் கதிரையில் அமர்ந்து கொண்டு பின்வருமாறு கூறியதை நான் காதால் கேட்டேன். ஒவ்வொரு வலியும் ஏதோ ஒரு நபியின் பாதச் சுவட்டை பின்பற்றுவார். நான் எனது பாட்டனார் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் பாதச் சுவட்டைப் பின்பற்றுகின்றேன். றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லமர்கள் எங்கு பாதம் வைக்கின்றார்களோ அதே இடத்தில் பாதம் பதிக்கின்றேன். நபியல்லாத வேறு எவருக்கும் இது சாத்தியமாவதில்லை(நபியல்லாதவருக்குக் கிடைக்காத அதி உயர் அந்தஸ்த்தை நான் அடைந்தேன்)


ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்ரார், பக்கம் - 51
அஷஷெய்கு அப்துல் காதிர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் காதால் கேட்டேன் என்று அஷ்ஷெய்கு அல்ஆரிப் அபூ முஹம்மத் அலி பின் இத்ரீஸ் அல் யஃகூபி அவர்கள் ஹிஜ்ரி 617இல் கூறுகின்றார்.
மனிதர்களுக்கு ஷெய்குமார்கள் உண்டு. ஜின்களுக்கும் ஷெய்குமார்கள் உண்டு. நான் இவர்கள் அனைவருக்கும் ஷெய்காக விளங்குகின்றேன். மீ்ண்டும் கூறுகின்றார்கள். ஷெய்கவர்களின் மரண வேளையில் தங்கள் பிள்ளைகளைப் பார்த்து எனக்கும், உங்களுக்கும் மற்றும் படைப்பினங்களுக்குமிடையில் வானத்திற்கும் பூமிக்குமிடையிலுள்ள தூரம் உண்டு. என்னைஎவரிலும் கியாஸ் (ஒப்புநோக்கிப்) பிடிக்க வேண்டாம். யாரையும் என்மீது நீங்கள் கியாஸ் பிடிக்க வேண்டாம்.

ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்ரார், பக்கம் - 52
அஷ்ஷெய்கு அபுஸ்ஸுஊது அஹ்மத் பின் அபீபக்கர் அல்ஹரீமி அல் அக்தார் அவர்கள் ஹிஜ்ரி 580இல் பக்தாதில் வைத்து ஷைய்குனா அஷஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு கூறியதை நான் காதால் கேட்டேன்.
என்னைப் பார்த்தவருக்கு சோபனம் அல்லது, என்னைக் கண்டவரைக் கண்டவருக்கு சோபனம் அல்லது என்னைக் கண்டவரைக் கண்டவரைக் கண்டவருக்கு சோபனம். என்னைக் காணதவரைப் பற்றி நான் கவலையடைகின்றேன்.

ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்ரார், பக்கம் - 53
அஷ்ஷெய்கு அல்ஆரிப் அபூ அம்று உத்மான் அஸ்ஸரீபீனி, அஷ்ஷெய்குஸ் ஸாலிஹ் அபூமுஹம்மத் அப்துல் ஹக் அல்ஹரீமி ஆகிய இருவரும் பக்தாதில் ஹிஜ்ரி 567இல் அஷ்ஷெய்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதை காதால் கேட்டதாக கூறுகின்றனர்.
புவியில் கிழக்கிலும்மேற்கிலும் வாழ்பவர்களே! வானத்தில் உள்ளோரே! நீங்கள் அறியாததை அவன் படைக்கின்றான்‘ என்று அல்லாஹ் கூறுகின்றான். நான் நீஙகள் அறியாதவைகளைச் சேர்ந்தவன். புவியில் கிழக்கிலும்மேற்கிலும் வாழ்வோரே! வாருங்கள். என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். இராக் வாசிகளே! நிலைமைகள் அனைத்தும் என் வீட்டின் தொங்குகின்ற திரைச்சீலைகள் போன்று என் கண் முன்னே இருக்கின்றன. எதை விரும்பினாலும் அதை அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் என்னிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.இல்லையெனில் நீஙகள் தாக்குப் பிடிக்க முடியாத படையை உங்கள் முன் நிறுத்துவேன். ஓ அடிமையே! என்னிலிருந்து ஒரு வார்த்தையைக் கேட்பதற்காக ஆயிரம் ஆண்டுகள் பயணம் செய். ஓ அடிமையே! ஒரு வார்த்தையைக் கேள். விலாயத் இங்கேதான் இருக்கின்றது. (ஆத்மீகப்) படித்தரங்களும் இங்கே இருக்கின்றன. இந்த அவையிலிருந்துதான் (விலாயத்தின்) மேல் ஆடை பங்கிடப்படுகி்ன்றன.
அல்லாஹ் அனுப்பாத எவரும் நபியாக இருப்பதில்லை. இந்த சபைக்கு வராத எவரும் வலியாக இருக்கவும் முடியாது. உயிருள்ள வலி உடலுடனும்மரணித்தவர் அவரின் ஆன்மாவோடும் இங்கு வருகை தருகின்றனர். ஓ அடிமையே! உனது கப்றில் உன்னிடம் வருகின்ற முன்கர்நகீர் ஆகிய இருவரிடம் என்னைப் பற்றிக் கேளுங்கள். என்னைப் பற்றி அவர்கள் உமக்கு விளக்கம் தருவார்கள்.

ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்ரார், பக்கம் - 54
அஷ்ஷெய்கு முஹம்மத் பின் அப்துல் லதீப் என்பவர் ஹிஜ்ரி 571இல் கூறுகின்றார்.
ஷைய்குனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பாரமான பேச்சைப் பேசினால்அதன் பின் நீங்கள் உண்மை உரைத்தீர்கள் என்று கூறுங்கள் என்று கூறுவார்கள். நான் உறுதியானதைத்தான் உரைக்கின்றேன். சந்தேகமானதை கூறுவதில்லை. நான் சொல்லப்பட்டதைத்தான் மொழிகின்றேன். வழங்கப்பட்டதைத்தான் பங்கீடு செய்கின்றேன். கட்டளையிடப்பட்டதைத்தான் செய்கின்றேன். எனக்கு கட்டளையிடுபவன் மீதுதான் உடபடிக்கைகுற்றப் பரிகாரம் ஆகிறா மீதாகும். என்னை நீங்கள் பொய்ப்பிப்பது உங்களது மார்க்கத்திற்கு கடும் நஞ்சாகும். மேலும் உங்களது உலக,மறுமைப் பேறுகள் இல்லாமல் போவதற்கும் காரணமாகும்.
நான் போர் வாளை ஏந்துபவன். நான் ஒரு போராளி. அல்லாஹ் உங்களுக்கு எச்சரிக்கின்றான். எனது நாவில் ஷரீஅத்தின் கடிவாளம் இல்லாதிருப்பினும்நீஙகள் சாப்பிடுவதையும்உங்கள் வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதையும் உங்களுக்குத் தெரிவிப்பேன். எனக்கு முன்னால் கண்ணாடி பாத்திரம் போன்று உள்ளும்புறமும் தெரியக் கூடியவாறு இருக்கின்றீர்கள். எனது நாவில் ஷரீஅத் சட்டத்தின் கடிவாளம் இல்லாதிருப்பின்யூஸுப் அலைஹிஸ்ஸலாமவர்களின் அளவைப் பேணியில் இருக்கும் இரகசியத்தை அது மொழியும். ஆயினும்மறைக்கப்பட்ட புதையலில் உள்ளது பகிரங்கப்படுத்தப்படக் கூடாது என்பதற்காகவே சாதரண ஆலிமின் முந்தானையைப் பிடித்துக் கொண்டுஎன்னை நான் மறைத்து வாழ்கின்றேன்.

ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்ரார், பக்கம் - 54
அஷ்ஷெய்கு அபூஸுஊது அல் ஹரீமிஅஷ்ஷெய்கு அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் காயிதுல் அவானிஅஷ்ஷெய்கு அபுல் காஸிம் உமர் அல் பஸ்ஸார் ஆகிய மூன்று மாபெரும் ஷெய்குமார்களும் பின்வருமாறு கூறுகின்றனர்.
அஷஷெய்கு முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்களி்ன் முரீதீன்களில் எவரும் மறுமை வரை தௌபா இன்றி மரணிக்க மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளித்துள்ளார்கள். இன்னும. அவர்களின் முரீது மற்றும் முரீதின் முரீது இவ்வாறு ஏழு தலைமுறை சுவர்கம் செல்வர் என்று கூறியுள்ளார்கள். மேலும் கூறினார்கள்,
ஒரு தலைமுறை வரை ஒரு முரீதின் அனைத்து விடயங்களுக்கும் நான் பொறுப்பாளியாகும். எனது முரீதின் மானம் கிழக்கில் கீறப்படுமாயின்நான் மேற்கில் இருப்பினும் அதனை நான் மறைப்பேன். ஆற்றல்ஆத்மீக நிலை ரீதியாக எமது முயற்சியினால் எமது சீடர்களைப் பாதுகாப்போம். என்னைக் கண்டவனுக்கு சோபனம். என்னைக் கண்டவனைக் கண்டவனுக்கு சோபனம். என்னைக் காணாதவனுக்காக நான் கவலைப்படுகின்றேன்.

ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்ரார், பக்கம் - 191
அஷ்ஷெய்கு அபுல் ஹஸன் அலி அல் குறைஷி திமஷ்தி என்பவர் கூறுகின்றார். முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு இவ்வாறு கூறுகின்றார்கள்.
பார்வை செல்லும் அளவு மிக நீளமான ஓர் ஏடு எனக்கு கொடுக்கப்பட்டது. அதில் எனது முரீதின் பெயரும் இன்னும்கியாமத் நாள் வரை இருக்கும் முரீதின்களின் பெயர்களும் பதியப்பட்டிருந்தன. இந்த ஏடு நன்கொடையாகவே தனக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. நரகத்திற்குப் பொறுப்பான மாலிக் அலைஹிஸ் ஸலாத்திடம் நரகத்தில் எனது முரீதின்களில் யாராவது உள்ளனராஎன்று கேட்டேன். அவர் இல்லை என்றார்.
எனது றப்பின் கண்ணியம்மகத்துவம் மீது ஆணையாக! பூமிக்கு மேல் வானம் இருப்பதுபோன்று எனது கரம் எனது முரீதின் மேலுள்ளது. எனது முரீது உறுதியாக இல்லாதிருப்பினும் நான் உறுதியாக உள்ளேன். எனது றப்பின் கண்ணியம் மகத்தும் மீது ஆணையாக! என்னையும்எனது முரீதுகளையும் சுவர்க்கத்தில் நுழைவிக்கும் வரை நாயனின் சந்நிதியிலிருந்து எனது கால் அசையாது.

ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்ரார், பக்கம் - 193
அஷ்ஷெய்கு அபுல் ஹஸன் அலி இப்னு அல்ஹீதி கூறுகின்றார்,
நானும் அஷ்ஷெய்கு பகாபின் பதுவ்வும்அஷ்ஷெய்கு முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹுவோடு இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கப்றை ஸியாரத் செய்தோம். அப்போதுஇமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி கப்றிலிருந்து வெளியே வந்து அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி அவர்களை நெஞ்சில் கட்டி அனணத்து ஒரு மேலங்கியை (கில்அத்) போர்த்தினார்கள். இதை என் கண்ணால் கண்டேன். பின் கூறினார்கள். ஷெய்கு அப்துல் காதிரே! ஹகீகத்தின் ஞானத்திலும்ஆத்மீகஹால் நிலை ஞானத்திலும்,செயல் ரீதியான ஹால் ஞானத்திலும்  உம்மிடம் தேவையுள்ள வனாக உள்ளேன் என்றார்கள்.

ஆதாரம் - பஹ்ஜத்துல் அஸ்ரார், பக்கம் - 226
(கௌதுல் அஃழம் அவர்கள் ஆரம்பத்தில் இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மத்ஹபைப் பின்பற்றினார்கள். ஹம்பலி மத்ஹபில் வழிகேடர்கள் இடைச்செருகல் செய்து களங்கப்படுத்தியதனாலும்அம்மத்ஹபைப் பின்பற்றுவோர் அருகி வருவதனாலும் இமாம் ஹன்பல் அவர்கள் கௌதுல் அஃழமின் உதவியை வேண்டினார்கள். இதன் பின் கௌதுல் அஃழம் அவர்கள் ஹன்பலி மத்ஹபுக்கு மாறி அதனை தூய்மைப்படுத்தி நிலைக்கச் செய்தார்கள்).
கௌதுல் அஃழம் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்,
ஹிஜ்ரி 521 ஷவ்வால் பதினாறாம் நாள் புதன்கிழமை ளுஹர் நேரத்தில் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் நினைவில் கண்டேன்.
மகனே! நீர் உபதேசம் செய்யாமலிருப்பது ஏன்என்று என்னிடம் கேட்டார்கள். தந்தையே! நான் அறபி அல்லாத அஜமி ஆகும். பக்தாதில் நாகரிகமான அறபு பேசுவோர் முன்னிலையில் எப்படி என்னால் உபதேசம் புரிய முடியும்என்று கூறினேன். வாயைத் திற என்றார்கள். வாயைத் திறந்தேன். ஏழு விடுத்தம் உமிழ்ந்தார்கள். இப்போது மக்களுக்கு உபதேசம் செய் என்றார்கள். ஹிக்மத் ஞானத்தாலும். அழகிய உபதேசத்தாலும் மக்களை உமது றப்பின் வழியில் அழையும் என்றார்கள்.
ளுஹர் தொழுதுவிட்டு கதிரையில் உட்கார்ந்தேன். கணிசமானோர் என்னிடம் வந்தார்கள். ஆயினும்,மனதில் ஒரு பதட்டம் ஏற்பட்டது. ஹளரத் அலீ இப்னு அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு மஜ்லிஸில் எனக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன்.
அவர்மகனே! நீ ஏன் பேசாமலிருக்கின்றீர்கள்என்று கேட்டார். தந்தையே! சற்று பதட்டமாக உள்ளது என்றேன். வாயைத் திற என்றார்கள். ஆறு விடுத்தம் துப்பினார்கள். ஏழு விடுத்தமாக ஏன் பூரணப்படுத்தவில்லைஎன்று கேட்டேன். அது றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களுடன்  உள்ள ஒழுக்கத்தினால் என்றார்கள். பின் என்னை விட்டும் மறைந்து விட்டார்கள். பின்பு கௌதுல் அஃழம் உரையாற்றினார்கள்.
சிந்தனையில் மூழ்கியிருப்பவன் மனம் என்ற கடலில்முங்கி மஅரிபா என்ற முத்துக்களை. நெஞ்சு என்ற கரைக்குக் கொண்டு வருகின்றான். அதனை நாவின் மொழி பெயர்ப்பாளராகிய தரகர் மொழிகி்ன்றார். அல்லாஹ்வின் திருநாமத்தை உயர்த்தி உச்சரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட அவனுடைய வீட்டில் அழகிய நல்ல வணக்க வழிபாடுகள் என்ற பெறுமதிமிக்க விலை கொடுத்து அதனை வாங்கப்படுகின்றது.
கௌதுல் அஃழம் அவர்கள் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு முதன் முதலாக ஆற்றிய உரை இதுவாகும்.

ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்ரார், பக்கம் - 58
ஹிஜ்ரி 468இல் ஸெய்குனா அபூ அஹ்மத் அப்துல்லாஹ் பின் அஹ்மத் அல்ஹக்கி அவர்கள் ஹர்த்என்ற மலையில் கல்வத்தில் இருக்கும்போது பின்வருமாறு கூறியதை நான் காதால் கேட்டேன் என்று அல் இமாம் அபூ யஃகூப் யூஸுப் பின் அய்யூப் என்பவர் கூறுகின்றார்.
மிக விரைவில் அஜம் நாட்டில் ஒரு குழந்தை பிறக்கும். அவரில் மகத்தான கறாமத்துக்கள் வெளியாகும். அனைத்து வலிமார்களிலும் அவர் உயர்ந்து காணப்படுவார். ‘எனது பாதம் அனைத்து வலிமார்களின் பிடரியிலும் இருக்கும் என்று கூறுவார். அக்காலத்திலுள்ள வலிமார்கள் அவர் பாதத்திற்கு கீழே இருப்பார்கள். அவரால் அக்காலத்தில் உள்ளோர் சிறப்புப் பெறுவர். அவரைக் காண்போர் அவரால் பயன் பெறுவர்.

 ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்ரார், பக்கம் - 15
(கௌதுல் அஃழம் அவர்கள் ஹிஜ்ரி 471இல் பிறந்தார்கள். பிறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்வை என்பது கவனிக்கத்தக்கது. கௌதுல் அஃழம் அவர்கள் பற்றி முன்கூட்டியே பலர் கூறியதாக இமாம் ஹஜர் மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பதாவா ஹதிதிய்யாவில் குறிப்பிட்டுள்ளார்கள்).
எனது பாதம் அனைத்து வலிமார்களின் புயத்தில் உள்ளது என்று கௌதுல் அஃழம் அவர்கள் கூறியபோது புவியிலுள்ள அனைத்து வலிமார்களும் தங்கள் பிடரியைத் தாழ்த்திக் கொடுத்தனர். மனிதர்கள், ஜின்கள் ஆகியேர்களில் உள்ள வலிமார்களில் கழுத்தைத் தாழ்த்திக் கொடுக்காத எந்த வலியும் கிடையாது.

ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்ரார், பக்கம் - 25
அஷ்ஷெய்கு அபுல் காஸிம் பின் அபீபக்கர் கூறுகின்றார், அஷ்ஷெய்கு கலீபா ஹளரத் மௌலானா ஜாமி ரஹ்மத்துல்லாஹி கூறுகின்றார்கள்,
கௌதுல் அஃழம் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பக்தாத்தில் வைத்து எனது பாதம் அனைத்து வலிமார்களின் பிடரியிலும் என்றதும், ஹளரத் அபூ மத்யன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஷாம் சிரியாவில் இருந்தார்கள். இச்செய்தியை கஷ்பின் மூலம் அவர்கள் அறிந்து கொண்டதும் தனது பிடரியைத் தாழ்த்திக் கொடுத்தவர்களாக, ”யா அல்லாஹ்! உன்னை நான் சாட்சியாகக் கூறுகின்றேன். உனது மலக்குகளைச் சாட்சியாகக் கூறுகின்றேன். கௌதுல் அஃழம் என்ன கூறினார்களோ அதற்கு நான் வழி்படுகின்றேன்”.

ஆதாரம்: நபஹாத்துல் உன்ஸூ
ஹளரத் ஹாஜா பஹாஹுல் ஹக் நக்ஷபந்தி ( நக்ஷபந்தியாதரீக்காவின் ஸ்தாபகர்) ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடத்தில் கௌதுல் அஃழம் அவர்களின் மேற்படி கூற்று பற்றி கேட்கப்பட்டதற்கு, ” அவர்களின் பாதம் என் பிடரியிலும் கண்ணிலும் உள்ளது என்று கூறினார்கள்.

ஆதாரம்: தப்ரீகுல் காதிர், பக்கம் - 02
கௌதுல் அஃழம் அவர்கள் மேற்படி கூறும்போது ஹாஜா ஙரீப் நவாஸ் அஜ்மீரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஈரானிலுள்ள குறாஸான் பகுதியிலுள்ள மலைப் பகுதியில் இபாதத் - தவம் செய்து கொண்டிருந்தார்கள். கௌதுல் அஃழம் அவகர்ளின் இக்கூற்றைக் கேட்டதும், உடனே அவர்களின் நெற்றி தரையில் படுமளவு கழுத்தை தாழ்த்தினார்கள்.

ஆதாரம்:தப்ரீகுல் காதிர், பக்கம் - 20
ஷமாயிம் இம்தாதிய்யா, பக்கம் - 43
அஷ்ஷெய்கு அபூபக்கர் அதீக் என்பவர் கூறுகின்றார்,
நான் சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை உம்மு அபீதா என்ற இடத்தில் ஹிஜ்ரி 576இல் சந்தித்தேன். அங்கு அவர்களின் சிரேஷ்ட தோழர்களும்  பழைய முரீதின்களும் ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டி, இந்த இடத்தில் தனது தலையையும் பிடரியையும் தாழ்த்தினார்கள். ஏன் தாழ்த்தினீர்கள்? என்று கேட்கப்பட்டதற்கு,
அஷ்ஷெய்கு அப்துல் காதிர் அவர்கள் இப்போதுதானே  எனது பாதம் அனைத்து வலிமார்களின் பிடரியிலும் என்று கூறினார்கள்,  என்றார்கள். அத்திகதியை அவர்கள் கூறிய நாளை ஒப்பிட்டோம். சரியாக இருந்தது.

ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்றார், பக்கம் - 33
ஸுஹ்ரவர்தியா தரீக்காவின் ஸ்தாபகரும், சிறந்தமுஹத்தித் - ஹதீஸ் கலை மேதையும், பகீஉம், சூபியுமான இமாம் ஷிஹாபுத்தீன் ஸுஹ்ரவர்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு தினம் கௌதுல் அஃழம் அவர்களின் அவைக்குச் சென்றார்கள். அங்கு கௌதுல் அஃழம் அவர்கள் எனது பாதம் அனைத்து வலிமார்களின் பிடரியிலும் என்று கூறியபோது பூமியைத் தொடும்வரை தலையைத் தாழ்த்திய பின் என் தலையிலும் என்று மூன்று முறை மொழிந்தார்கள்.

ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்ரார், பக்கம் - 34
கௌதுல் அஃழம் அவர்கள் எனது பாதம் என்று கூறும்போது, செய்கு அர்ஸலான் திம்ஷகி அவர்கள் டமஸ்கஸ்ஸில் இருந்தார்கள். உடனே தனது சிரசை தாழ்த்திக் கொடுத்த பின் குத்ஸ் என்ற பரிசுத்த (ஞானக்) கடலில் இருந்து பருகி சிறப்பாந்தவர். மஃரிபத் மருவுதலின் விரிப்பில் அமர்பவர், அவர்களின் பாதின் உள் யதார்த்தம் றுபூபிய்யத்தின் மகத்துவத்தையும் ஏகத்துவ (வாஹிதிய)த்தின் ஜலாலியத்தையும் முஷாஹதா செய்கின்றது. அவர்களின் பண்புகள் அல்லாஹ்வின் கிப்ரிய்யா என்ற பெருமையில் பனாவாகி அழிந்து சுஜூது செய்கின்றது. மகாமே பறார் - என்ற நிலையைக் கண்காட்சியாக காண்பதில் அவர்களின் வுஜுத் இருப்பு அழிந்து விட்டது. அவர்களின் றூஹின் பேரில் அஸ்ல் - அனாதியின் தென்றல் அச்சமும், வெட்கமுமின்றி தொட்டுச் செல்கின்றது.
பேரொளிகளின் கருவூலத்திலிருந்து ஹிக்மத் (ஞானம்)தை மொழிந்தார். அவர்களின் இதயம் அதன் மனோன்மணியோடு மறைபொருளான இரகசியத்தில் இணைந்து விட்டது. இறை நெருக்கத்தில் எரிந்தவர்,தெளிவிலும் அழிந்தவர், ஜீவன் பெற்று எழுந்தவர், காது திறந்தவர், தெளிவு பெற்றவர், பணிவுடன் பகர்பவர், தேவையாகுதல் மூலம் தாழ்த்திக் கொள்பவர், தனித்துவத்துடன் இறை நெருக்கம் பெற்றவர், கண்ணியத்துடன் நேர்முகம் உரையாடுபவர், அவர்களின் றப்பின் தரப்பிலிருந்து மிகச் சிறந்த காணிக்கை உண்டாகட்டும்.
இந்தச் சிறப்புமிக்கவர்கள் இப்போது யாராவது உள்ளனரா?  என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. ஆமாம் இருக்கின்றனர். அவர்களுள் ஷெய்கு அப்துல் காதிர் அவர்கள் தலைவர் ஆகும் என்றார்கள்.

ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்ரார், பக்கம் - 37,38
கௌதுல் அஃழம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் எனது பாதம் அனைத்து வலிமார்களின் பிடரியிலும் என்று கூறிய பின் அனைத்து வலிமார்கள், அப்தால்கள், அவ்தாத்கள் ஆகியோர் அன்னாரின் அவைக்கு வந்தால் பின்வருமாறு விளித்து ஸலாம் கூறுவார்கள்.
காலத்தின் எஜமானே! அஸ்ஸலாமு அலைக்கும்.
தளத்தின் எஜமானே! அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் கட்டளையால் எழுந்து நிற்பவரே! அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் வேதத்தின் வாரிசே! அஸ்ஸலாமு அலைக்கும்.
றஸூலுல்லாஹ்வின் பிரதிநிதியே! வானத்திலும், பூமியிலும் உணவுத் தட்டை மாயிதாவை வைத்திருப்பவரே! தற்காலத்திலுள்ள அனைத்து வலிமார்களையும் ஒரே குடும்பமாக வைத்திப்பவரே! எவரின் துஆவினால் மழை பொழிந்து, அதன் பறக்கத்தால் கால் நடைகளிலிருந்து பால் சுரக்கும் நபரே! அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆதாரம்: பஹ்ஜத்துல் அஸ்ரார், பக்கம் - 34

No comments:

Post a Comment