Wednesday, April 30, 2014

இறை உள்ளமை - உஜூத் (தாத்)

 எழுதியவர்  
    அல்லாஹுத் தஆலா "உஜூத்" ஆவான். "உஜூத்" என்பதன் பொருள் "இருகிறது" என்பதாகும். இந்த சொல் இல்லை என்ற சொல்லுக்கு எதிரானது ஆகும். இவ்விரண்டு சொற்களினது கருத்துத்தை உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால் இருக்கிறது என்பதில் அனைத்தும் அடங்கிவிட்டது, இல்லை என்பது சொல்லில் இருகிறதே தவிர யதார்த்தத்தில் ஒன்றுமே இல்லை என அறியலாம். எனவே உள்ளமை முழுவதும் அந்த இருக்கிறது என்ற சொல்லில் தான் அடங்கியுள்ளது.
இந்த உஜூதுக்கு உருவம் வரம்பு எதுவும் இல்லை, இதே போல இவ்வுள்ளமையின் கல்யாண குணங்களுக்கும் (சிபாத்) வரையரை (limits) எதுவும் இல்லை. இது தன்சீஹின் நிலைகுரியதாகும். இதிலிருந்து (உஜூதில்) வெளியாகக் கூடிய சுடர்களுக்கு (தஜல்லியாத்) உருவமும் எல்லையும் உண்டு. எவ்வாறாயினும் இது உஜூதில் எம்மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.
அல்லாஹுத் தஆலாவின் இவ்வுள்ளமையை (உஜூத் - தாத்) அறிய முடியாது, அனைத்து அறிவிற்கும் அப்பாட்பட்டதே இவ்வுள்ளமையாகும் இதனாலேயே மெய் ஞானிகள், "மெய் ஞானத்தின் முடிவான அறிவே இறையுள்ளமையை (அல்லாஹ்வின் உள்ளமையை) அறிய முடியாது என்று அறிந்துணர்வதாகும் " என்று கூறுகின்றார்கள்.
இறையுள்ளமையை அறிய முடியாது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். வானத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் முதலியன இருப்பதை தினமும் காண்கின்றோம். நம் கண்களுக்கு மிகவும் சிறிய பொருள்களாகவும், அருகருகே இருப்பது போல தெரியும் ஆனால் இவை உள்ளமையில் எவ்வளவு பெரிதாக இருக்கின்றன, பூமியின் விட்டத்தை விட சூரியனின் விட்டம் 109 மடங்கு விட்டத்தை உடையதாகும், அருகருகே காணப்படும் நட்சத்திரங்கள் ஒன்றிலிருந்து மற்றதுக்கு பலகோடி மடங்கு துரத்தில் அமைந்துள்ளது. இத்தகைய ஆகாய வெளியில் நாம் வாழும் இப்பரந்த பூமி ஓர் அணுவுக்கே சமமாக உள்ளது. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை எல்லாம் "குன்" என்ற சொல்லை கொண்டு ஆக்கியுள்ளவனின் உள்ளமையை எங்கனம் நமது அறிவால் இன்னது தான், இப்படிதான், இங்குதான் என்றெல்லாம் மட்டுப்படுத்த முடியும் ? இந்த வான்வெளியே நம் அறிவுக்கு எட்டாத நிலையில் நாம் அல்லாஹின் உள்ளமையை அறிவால் மட்டுப்படுத்தவோ, அவன் உள்ளமையை அறியவோ முடியுமா?
இறைவனை ஞானதிருஷ்டியால் (கஷ்பால்) காண்பது என்பது அவனுடைய உள்ளமையை (தாத்தை) காண்பதல்ல. அவனுடைய அருட் சுடர்களை (தஜல்லி) காண்பது ஆகும். ஆக அவன் உள்ளமையை அறிய முயல்வது வீண் வேலையும், குப்ரை உண்டாக்கக் கூடியதுமாகும். இதனாலே தான் இறைவனை அறிய அவன் படைப்புக்களை ஆராயும் படி கூறப்படுகின்றது.

வாஜிபுல் வுஜூத் , மும்கினுள் வுஜூத்

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் வஸ்துகளையும் கவனித்துப் பார்க்கும் போது, ஒன்றாவது தன்னை தானே உண்டாக்கி கொண்டது என்று நினைக்க முடியுமா? அல்லது உண்டாக்கித் இருக்குமா?. இல்லை, அவை உண்டாக முன்பு அவை இல்லாமையில் தான் இருந்தது. இல்லை என்ற நிலையில் இருந்த ஒன்று எவ்வாறு தன்னை உருவாக்கிக்கொள்ள முடியும்?. மேலும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே மாறுதலடைபவையாகவும், அழிபவையாகவும் தான் உள்ளன. எனவே, அவற்றில் எதுவும் பூர்விகமானதல்ல புதிதானது ஆகும் என்பது விளங்கும். புதிதானது உண்டாவதற்கு ஒரு மூலம் அல்லது பரம் பொருள் இருக்க வேண்டும். அந்த வேறொன்றுக்கு தொடக்கம் இருந்தால் அதை உண்டாக்க வேறொன்று இருக்க வேண்டும், இவ்விதம் ஒன்றன் பின் ஒன்றாக பார்த்து வந்தாலும் இறுதியில் பூர்விகமான ஓர் உள்ளமை இருக்கவே வேண்டும் என்றாகிறது, அந்த உள்ளமை இல்லாலது எதுவுமே இருக்க முடியாது. இதனாலேயே அவ்வுள்ளமைக்கு "வாஜிபுல் வுஜூத்" (அவசியமான உள்ளமை) என்று கூறப்படும். இன்னும் இதுவே "குன் ஹு ஸாத்" என்றும் கூறப்படுவதும் ஆகும்.
புதிதானவைகள் (படைப்புக்கள்) இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவற்றால் அந்த உள்ளமைக்கு எந்த தேவையும் இல்லையாதலால் அதற்கு "மும்கினுள் உஜூத்" (தனக்கு தானே ஆதாரமான அல்லது மூலமான உள்ளமை) என்ற பெயர் உண்டாயிற்று.
உஜூத் (உள்ளமை) எப்போதும் ஒன்று தான் அதை நாம் அறிய படைப்ப்பிணங்களை ஆராயும் போது அதன் தன்மையை "வாஜிபுல் வுஜூத்" (அவசியமான உள்ளமை) , "மும்கினுள் உஜூத்" (தனக்கு தானே ஆதாரமான அல்லது மூலமான உள்ளமை) என்று அறியப்படுவதால் அவ்வாறு பிரித்து கூறப்படும்.
அந்த உள்ளமை பூர்விகமானது என்றும், அண்டங்கள் யாவும் உண்டாக காரணமாக இருப்பதால் சர்வ வல்லமை உடையது என்றும், அனைத்து சிருஷ்டிகளையும் கூர்ந்து கவனிக்கும் போது அவ்வுள்ளமை சம்பூர்ண ஞானமுடையது என்றும், சிருஷ்டிகள் அனைத்திலும் உயிர் பரந்து செறிந்து காணப்படுவதால் அந்த உள்ளமை நித்தியா ஜீவன் உடையது என்றும் அறியலாம்.
இவ்வுள்ளமையை உடையவனே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஆகும்.

தொகுப்பு: "அஸ்ராருள் ஆலம்" என்ற புத்தகத்தில் இருந்து...

இறை திருநாமமும் பண்பும் (அஸ்மாஉ , ஸிபாத்)

'அஸ்மாஉ' என்பது 'இஸ்ம்' எனும் அரபிப் பதத்தின் பன்மை. இஸ்ம் என்பது எதற்கு பெயர் வைக்கப்படுகின்றதோ அதைக் குறிக்கும் ஒன்றாகும். இந்த இஸ்ம் என்பது கற்பனையில் உருவகப்படுத்தவோ, ஆழ்ந்து ஆராயவோ, மனதில் பதியவைத்துக் கொள்ளவோ முடியுமானதாக இருகின்றது.
இனி ஸிபாத் என்பது 'சிபத்' எனும் அரபிப் பதத்தின் பன்மை ஆகும். ஸிபத் என்பது வர்ணனை, பண்பு, குணம் எனப் பொருள் படும். அதாவது எந்த பொருளை நாம் வர்ணிக்கின்றோமோ அந்தப் பொருளின் தன்மையை அல்லது குணத்தை உணர்த்துவதே ஸிபாத் ஆகும்.
பிரஞ்சம் வெளியாகக் காரணம் 'அஃயான் தாபிதா' வாய் இருக்கும். அஃயான் தாபிதா அஸ்மாவையும், சிபாதையும் அதற்கு காரணமாக கொண்டதாகும். அவையோ உள்ளமையை (தாத்தே) தமக்கு காரணம்(மூலம்) என்று காட்டும். அதாவது இப்பிரபஞ்சத்தின் தோற்றமானது தாத் முத்லக் ஆன அல்லாஹ்வின் அஸ்மா சிபாத்துகளை கொண்டே உருவாயிற்று அதனாலே தான் அல்லாஹ்வை அவனுடைய அஸ்மா ஸிபாத்தை கொண்டே ஓரளவு அறிய முடியும்.
ஸிபாத் ஆனது தாத்தை (உள்ளமையை - அல்லாஹ்வை) விட்டும் வேறானது அல்ல புதிதானதும் அல்ல அவை அல்லாஹ்வுடைய வுஜூதுடனேயே காணப்படும். பிரபஞ்சம் உண்டாவதற்கு முன் அவனுடைய ஸிபாத்தும், ஸிபாத்துடன் தொடர்புடைய அஸ்மாவும் வெளிப்படுத்தப்படாமல் இருந்தன. இதனாலையே அனைத்தையும் படைக்கும் முன் அல்லாஹ் மட்டுமே (அல்லாஹ் உடைய சிபாத், அஸ்மா வெலிப்படுத்தபடாமல் இருந்த நிலை)இருந்தான் என்று நபி பெருமானார் சல்லல்லஹு அலைஹிவசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்.
இன்னும் அஸ்மா உல் ஹுஸ்னா தொடர்பாக அல்லாஹுத் தஆலா திருமறையில் குறிப்பிடும் போது
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا ۖ
"அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் "அல் குர்ஆன் (7:180)
என்று குறிப்பிடுகின்றான். இன்னும் அவைகள் அவனின் பண்புகளையும் (சிபாத்துகள்) எடுத்துக் காட்டுவனவாகும். தன் அடியார்களின் விதர்ப்பமான வெவ்வேறு சமயங்களில் திருநாமங்களின் ஒன்றில் அல்லது பலதின் குணப்பாட்டை சந்தர்பத்திற்கு ஏற்றவாறு அவர்களில் அல்லாஹுத் தஆலா தோற்றமளிக்க அல்லது வெளியாக்கச் செய்கின்றான். எனவே இத் திருநாமங்கள் அவனின் குத்ரத்தை (சக்த்தியை) குறிக்கின்றன. இத் திருநாமங்கள் தத்தமக்குரிய பண்புகளை (ஸிபாத்துகளை) வெளியாக்குகின்றதாலே இப்பிரபஞ்சம் இயங்குகின்றது. இது எவ்வாறென்றால் அல்லாஹுத் தஆலா ஆற்றலுடையவன் (காதிருன்) என்ற ஸிபத்தால் இப்பிரபஞ்சம் வெளியாக்கப்பட்டது. அவனுடைய சிருஷ்டிப்பவன் (ஹாலிக்) என்ற அஸ்மாவினால் சிருஷ்டிகள் வெளிப்பட்டன. உணவளிக்கப்பட வேண்டியவைக்கு உணவளிப்பவனாக இருப்பதால் அவனுடைய ''உணவளிப்பவன்" என்ற நாமம் வெளியாயிற்று.
உதாரணத்திற்கு, ஒருவருக்கு வீடு கட்டத் தெரிந்திருப்பது அவரின் ஸிபத் ஆகும், அத்தொழிற் பண்பு உடையவர் பெயர் 'கொத்தன்' என்று அழைக்கப்படும். இதுபோல ஆற்றல் மிக்கவனுக்கு 'காதிர்' (ஆற்றலுடையவன்) என்றும், அறிவெனும் பண்பு உள்ளவனுக்கு ஆலிம் (அறிந்தவன்) என்றும், பார்வை எனும் பண்புடையவன் 'பஸீர்' (பார்வையுடையவன்) என்றும், அடக்கியாளும் தன்மை உடையவனுக்கு 'கஹ்ரு' ( அடக்கியாள்பவன்) என்று கூறுவது போல அல்லாஹ்விற்கு அறியப்பட்ட திருநாமங்கள் 99 இருப்பதாக கூறப்படுகின்றது.
இத்திருனாமங்களின் குணப்பாட்டினாலேயே மனிதன் புதுப் புது விசயங்களை கண்டுபிடிக்கச் செய்கின்றான். இன்றைக்கும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் நூதனங்கள் எல்லாம் அல்லாஹுத் தஆலாவின் திருநாமங்களின் குணங்கள் அவனிலிருந்து மனிதனில் வெளியாக்கப்படுவதால் ஆகும். இத் திருநாமங்களில் 'இஸ்முல் அஃலம்' என்ற கனதி மிக்க அல்லது மிக சக்திவாய்ந்த திருநாமங்களும் அடங்கும். இதனைக் கொண்டே இறை நேசர்கள் பல புதுமைகளை நிகழ்த்துகின்றார்கள். இதனாலேயே அல்லாஹுத் தஆலா தனது திருநாமங்களின் மூலம் அழைத்து பிரார்த்திக்கும் படி கூறுகின்றான்.
இவ்வாறு இறைவனில் நின்றும் இப்பண்புகள் மனிதனுக்கு வருகின்றவையானாலும், அல்லாஹுத் தஆலா வின் பண்பிலிருந்து ஒரு பங்கு வந்து இறங்குவதாகும் என்று என்னிவிடக் கூடாது. ஆனால் யதார்த்தம் அதுவன்று. உதாரணமாக இறைவனுடைய 'ஹயாதுடையவன்' என்ற ஜோதியிலிருந்து (தன்மையிலிருந்து) ஒளி பெற்றே சிருஷ்டிகள் யாவும் உயிருடையவையாய் விளங்குகின்றன. அதனால் அவனுடைய உயிர் சிருஷ்டிகளில் வந்து இருப்பதாக சொல்ல முடியாது. இதுவானது இறைவனை சூரியனுக்கும் அவனுடைய கல்யாண குணங்களை அதன் பிரகாசத்திற்கும் உவமை கூறுவதை கொண்டு விளங்கலாம். சூரியனுடைய பிரகாசத்தால் அதை விட்டு எதுவும் குறையவும் இல்லை அகலவும் இல்லை என்பது போல அது தன் பிரகாசத்தை செலுத்தும் பொருள்களில் வந்து சேரவும் இல்லை. இதுபோல அல்லாஹுத் தஆலாவின் சிபாத்களும் அஸ்மாக்களும் படைபினங்கள் மீது செலுத்தப்படுகின்றதால் அவை அக்குணங்களை யதார்த்தில் தன்னில் கொண்டு இயங்குபவை அன்று மாறாக இயக்கப்படுபவை ஆகும்.
பிரபஞ்சம் முழுவதும் மிக விரிவான கண்ணாடி போன்றது, அல்லாஹுத் தஆலாவின் சிபாத்களும் அஸ்மாக்களும் அந்தக் கண்ணாடியில் பிரகாசிக்கின்றன. கண்ணாடியில் தோன்றும் பொருள்களுக்கு அந்தத் தோற்றம் நிழலாய் இருக்கும். இதனாலே பிரபஞ்சம் அஃயான் தாபிதா வின் நிழல் என்றும், அஃயான் தாபிதா அஸ்மா சிபாத்களின் நிழல் என்றும், அஸ்மாவும் சிபாதுன் ஸிபாத்தும் அல்லாஹுத் தஆலாவின் உஜூதின் நிழல் என்றும் கூறப்படுகின்றது. இவ்விதம் யதார்த்தத்தில் நமக்கு எதுவும் சொந்தமாக இல்லாமல் இருகின்றோம்.
சிந்தித்து அறிவீர்கள்

Tuesday, April 29, 2014

வலிமார்கள் என்பவர்கள் யார்?


எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா இந்த உலகத்தை படைத்து, அதில் கோடிக்கணக்கான ஜீவராசிகளை படைத்து, அந்த அத்தனை ஜீவராசிகளிலும் மனிதனை ஒரு உயர்ந்த, கண்ணியம் வாய்ந்த படைப்பாக படைத்தான். இந்த மனிதர்களிலேயே அதி கண்ணியம் வாய்ந்த மனிதராக எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களை படைத்தான். அன்னவர்களுக்கு பின் மனிதர்களில் சிறந்த படைப்பாக ஏனைய ரசூல்மார்களை படைத்தான். இந்த ரசூல்மார்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பாக ஏனைய நபிமார்களை படைத்தான். நபிமார்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பாக ஸஹாபாக்கள் இருக்கிறார்கள். ஸஹாபாக்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பாக தாபியீன்களும், தபஅத்தாபியீன்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பு அதற்கு பின்னால் வந்த அனைத்து இஸ்லாமிய இறைநேசர்களும், இமாம்களும் ஆவார்கள். இவர்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பு ஏனைய ஸாலிஹான முஸ்லிம்களாவார்கள்.
அல்லாஹ்வின் கட்டளையும், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் ஸுன்னத்துகளையும் ஒன்று விடாமல் பின்பற்றி, இஸ்லாம் என்னும் மார்க்கத்தில் முறையாக நடந்து ஷரீஅத், தரீகத், ஹகீகத் என்ற மன்ஸில்களை அதாவது படித்தரங்களை கடந்து இறுதியில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக்கொண்டவர்களே அல்லாஹ்வின் அவ்லியாக்கள், வலிமார்கள் எனப்படுவார்கள்.
அவ்லியாக்கள் என்றால் அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள். அதாவது அல்லாஹ்வின் விருப்பத்துக்கு உரியவர்கள். அல்லாஹ்வால் நேசிக்கப்படுபவர்கள் என்று அர்த்தமாகும். வலி என்றால் ஒரு இறைநேசரை குறிக்கும். வலிமார்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பல இறைநேசர்களை குறிக்கும் நாம் வலிமார்கள் என்று கூறினால் அதில் ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள் ஏனைய அவ்லியாக்கள் அனைவரும் அடங்குவார்கள். என்றாலும் பொதுவாக மக்கள் பேசும்பொழுது, ஸஹாபாக்களை அவர்களது சிறப்பான அந்தஸ்தை கூறியே, அதாவது ஸஹாபாக்கள் என்று கூறியே அழைக்கிறார்கள். ஏனைய தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள், இஸ்லாமிய பெரியார்கள் இவர்களைத்தான் பொதுவாக அவ்லியாக்கள் என்று கூறுகிறார்கள்.
ஏனென்றால் உலகத்திலுள்ள எல்லா அவ்லியாக்களை விடவும் அதி கண்ணியமும், சிறப்பும், அந்தஸ்தும் மிக்கவர்கல்தான் ஸஹாபாக்கள். எனவே நாம் எந்த ஒரு அவ்லியாவையும் ஸஹாபாக்களை விட சிறந்தவர்கள் என்று கூறக்கூடாது. அப்படி நினைத்தும் பார்க்கக்கூடாது. அதேபோல் உலகத்திலுள்ள எந்தவொரு அவ்லியாவையும் எங்களோடு ஒப்பிட்டுப்பார்த்து எங்களைப்போன்ற சாதாரண மனிதர்கள்தான் என்று கூறக்கூடாது. இன்னும் அப்படி நினைத்தும் பார்க்கக்கூடாது. இதுதான் எங்களுடைய ஸுன்னத் – வல் – ஜமாஅத்துடைய அகீதா.
இந்த அவ்லியாக்களைப்பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் அஸ்ஸவஜல் புனித அல்குர்ஆனில் கூறும்போது: ” அல்லாஹ்வுடைய அவ்லியாக்களுக்கு எந்த பயமும் இல்லை. எந்த கவலையும் இல்லை” என்று கூறுகிறான். அவர்கள் விரும்பாத ஒன்று நடந்து விட்டதே என்று கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் விரும்பாத ஒன்று எதிர்க்காலத்தில் நடக்குமோ என்று பயப்படவும் மாட்டார்கள். இதுதான் இதன் பொருள். ஆனால் கியாமத்து நாளைப்பற்றிய கவலை மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் அதிகமாக இருக்கும். அதேபோன்று அல்லாஹ்வுடைய அச்சம், பயம் மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் மிக அதிகமாக இருக்கும். அதேநேரம் இந்த உலக சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்கள் எந்த கவலையும், பயமும் அடையமாட்டார்கள்.
இதே போன்று அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறியதாக எங்கள் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் திருவுளமானார்கள்:
” எனது அடியான் நஃபிலான வணக்கங்களை விருப்பத்துடன் செய்து, என்னுடைய நெருக்கத்தைபெற விரும்பி, என்னை நெருங்கினால் நான் அவனை நேசிக்கும் அளவுக்கு ஆகிவிடுகிறான். நான் அவனை நேசித்து விட்டால், அவன் கேட்கும் காதாகவும், பார்க்கும் கண்ணாகவும், பிடிக்கும் கையாகவும், நடக்கும் காலாகவும் நான் ஆகிவிடுகிறேன்.” இந்த ஹதீஸ் ஸஹீஹுல் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பத்ர் யுத்தம் தொடங்குவதற்கு முன் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் ஒரு பிடி மண்ணை எடுத்து எதிரிகள் உள்ள இடத்தை நோக்கி வீசினார்கள். எதிரிகளுடைய பார்வை திசை திரும்பியது அதனால் அந்த யுத்தத்தில் வெற்றிப்பெற்றார்கள். இதை அல்லாஹ் அஸ்ஸவஜல் அல்குர்ஆனில் சொல்லும்போது, ” நாயகமே! நீங்கள் அந்த மண்ணை எறியவில்லை. அந்த மண்ணை அல்லாஹ் தான் எறிந்தான்” என்று கூறி காட்டுகிறான். இது நமது கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இவை அல்லாஹ்வின் அவ்லியாக்களாக யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இது சொந்தமானது.
அதே பத்ர் யுத்தத்தில் எதிரிகளை ஸஹாபாக்கள் கொன்றபோது, அல்லாஹ் அஸ்ஸவஜல் அல்குர்ஆனில் கூறினான்: ” நீங்கள் எதிரிகளை கொல்லவில்லை, அல்லாஹுத்தஆலாவே கொன்றான்” என்பதாக. இந்த வசனத்திற்கு பொருள் என்னவென்றால், அல்லாஹ் சொல்கிறானே நான் ஒருவரை நேசிக்கும்போது அவன் கேட்கும் காதாகவும், பார்க்கும் கண்ணாகவும், பிடிக்கும் கையாகவும், நடக்கும் காலாகவும் நான் ஆகிவிடுகிறேன் என்று. இதுதான் இதற்கு அர்த்தமாகும்.
எனவே அல்லாஹ் அஸ்ஸவஜல் தனக்கு சொந்தமான சில பதவிகளை அவ்லியாக்களுக்கு வழங்கி, அவர்களை இந்த உலக மக்களுக்கு தன் பிரதிநிதியாக அதாவது கலீஃபாவாக ஆக்கி வைத்திருக்கிறான். எப்படி எங்கள் இனிய தூதர் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் உலகத்துக்கே ரஹ்மத்துலில் ஆலமீனாக இருக்கிறார்களோ அப்படியே அவ்லியாக்களை அல்லாஹ் அஸ்ஸவஜல் இந்த உலக மக்களுக்கு கிருஃபையுள்ளவர்களாக ஆக்கிவைத்துள்ளான்.
மேலும், அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் ஸூரதுன்னிஸா 59ம் வசனத்தில் கூறும்போது, ” மூஃமின்களே! அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள். இன்னும் அவனது ரஸூலுக்கும் வழிப்படுங்கள். மேலும் உங்களில் தீனை பரப்பக்கூடிய உலமாக்களுக்கும், அவ்லியாக்களுக்கும் வழிப்படுங்கள்.” என்று கூறியுள்ளான். (ஆதாரம்: தப்ஸீர் ரூஹுல் பயான், தப்ஸீர் கபீர்)
ஆகவே அல்லாஹ் அஸ்ஸவஜல் அந்தக்காலத்தில் நபிமார்களைக்கொண்டு நடத்தியதை இன்று அவ்லியாக்களைக்கொண்டு நடத்துகிறான். அவர்களாலேயே உலகம் நிலைபெற்றிருக்கிறது.
ஒரு முறை பூமி கூறியது, ” அல்லாஹ்வே! என் மீது நபிமார்கள் நடந்தார்கள். அவர்களுக்கு பிறகு கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களை சந்தோசத்துடன் சுமந்தேன். அன்னவர்களும் சென்றுவிட்டார்கள். இப்போது நான் தனித்துவிட்டேன்! என் மீது எந்த நபியும் இல்லையே!” என்று அழுது முறையிட்டது. அதற்கு அல்லாஹ் அஸ்ஸவஜல் ” நான் சில அவ்லியாக்களை அனுப்புவேன். அவர்களது இதயங்கள் நபிமார்களின் இதயங்களை போல் இருக்கும். அவர்கள் கியாமத்து நாள் வரை உன் மீது நடப்பார்கள்” என்று பூமிக்கு அறிவித்தான்.
மேலும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். ” எனது உம்மத்துக்களில் 40 மனிதர்கள், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுடைய இதயத்தைப் போன்ற உள்ளம் படைத்தவர்களாக உலகத்தில் இருந்தே வருவார்கள். அல்லாஹுதஆலா அந்த நபர்களைக்கொண்டு இவ்வுலகத்தில் வாழ்பவர்களின் நோய்களை தீர்த்து வைப்பான். அவர்களுக்காக மழையை பொழிய வைப்பான். அவர்களைக்கொண்டுதான் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கு உதவி புரியப்படும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் தபரானியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உலகத்தில் அவ்லியாக்கள் 440 பேர் இருப்பார்கள். அதில் நுஜபாக்கள் 300 பேர், நுகபாக்கள் 70 பேர், அப்தால்கள் 40 பேர், அகியார்கள் 10 பேர், உறபாக்கள் 7 பேர், அன்வார்கள் 5 பேர், அவ்தாத்கள் 4 பேர், முக்தார்கள் 3 பேர், குதுபு ஒருவர். இவர்களில் குதுபே அனைவருக்கும் தலைவராவார். இவரை கௌஸு என்றும் சொல்வார்கள்.
இப்படி குதுபுகளாக ஒவ்வொரு காலத்திலும் இருந்தவர்கள்தான் காதிரியா தரீக்காவை உருவாக்கிய குத்புல் அக்தாப் கௌஸு அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்கள், ரிஃபாயி தரீக்காவை உருவாக்கிய ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸையிது அஹ்மதுல் கபீர் ரிஃபாயீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள், ஷாதுலி தரீக்காவை உருவாக்கிய இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள், சிஷ்தி தரீக்காவை உருவாக்கிய ஸுல்தானுல் அவ்லியா அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் மற்றும் நாகூர் ஷாஹுல் ஹமீத் நாயகம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் ஆவார்கள்.
இதேபோல் உலகத்தில் பல குதுபுமார்கள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் கியாமத்து நாள் வரை வாழ்வார்கள். படைப்புகள் மீது அவர்கள் ஆட்சி செய்யக்கூடியவர்களாக இருப்பதனால் அவர்களுக்கு “கௌஸு” என்றும் பெயர். இவர்களுக்காகவே அல்லாஹ் வானத்திலிருந்து மழையை பொழியச்செய்கிறான். உலக மக்களுக்கு அல்லாஹ் கொடுத்த ரஹ்மத்துகளை ஒருத்தட்டிலும், குதுபுக்கு கொடுத்த ரஹ்மத்துகளை ஒருத்தட்டிலும் வைத்தால் குதுபுவின் தட்டே பாரமாக இருக்கும். அல்லாஹுதஆலா நபிமார்களுக்கு தனது செய்தியை வஹீ மூலம் அறிவித்தான். அதுபோல் அவ்லியாக்களுக்கு ” இல்ஹாம்” என்ற ஞான உதிப்பு மூலம் தெரியப்படுத்துகிறான்.
அவ்லியாக்கள் நபிமார்களுடைய வாரிசுகளாகும், பிரதிநிதிகளாகவும் இருக்கின்றார்கள். இதை கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறும்போது, ” அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகள் ” என்று கூறினார்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறும்போது, ” என்னுடைய உம்மத்துக்களிலுள்ள அறிஞர்கள், பனீஇஸ்ராயீல்களிலுள்ள நபிமார்களை போன்றவர்களாவார்கள். ” என்று கூறினார்கள்.
அவர்களின் தொழுகைக்கும் எங்களது தொழுகைக்கும் நிறைய வித்தியாசமுண்டு. நாங்கள் தொழுகையில் நின்றால் கிப்லாவை நோக்கியே நிற்போம். ஆனால் வலிமார்களோ தொழுகையில் நின்றுவிட்டால் அல்லாஹ்வை நோக்கியே நிற்பார்கள். அவர்கள் தொழுகையில் தங்களது உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் இறைவனின் பக்கம் நோக்கியே நிற்பார்கள். இத்தகைய பக்குவத்தை அடைந்தவர்களே வலிமார்கள் என அழைக்கிறோம்.
அதுமட்டுமல்ல, நாமும் நோன்பு நோற்கிறோம், வலிமார்களும் நோன்பு நோற்கிறார்கள். எங்களது நோன்பிற்கும் அவர்களது நோன்பிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. நாம் நோன்பு நோற்றால் உண்ணாமலும், குடிக்காமலும்தான் இருக்கிறோம். ஆனால் வலிமார்கள் நோற்கும் நோன்பு அப்படிப்பட்டதல்ல. அவர்கள் உண்ணாமலும், குடிக்காமலும் இருப்பதோடு மட்டுமல்ல, உடல் உறுப்புகளையும் நோன்பு நோற்க வைப்பார்கள். எப்படியென்றால் பார்க்க கூடாததை பார்க்காமல் கண்களை தடுத்தார்கள். கேட்க கூடாததை கேட்காமல் காதுகளை தடுத்தார்கள். பேச கூடாததை பேசாமல் நாவை தடுத்தார்கள். இதைப்போன்று முழு உடலையும் தீமையை விட்டும் தடுத்தார்கள். இவர்களே வலிமார்கள்.
அல்லாஹ் அஸ்ஸவஜல் அல் குர்ஆனில் கூறும்போது, ” அல்லாஹ்வின் இறைநேசர்கள் எப்போதும் திக்ரிலே அதாவது அல்லாஹ்வின் தியானத்திலே இருப்பார்கள்.” எப்படியென்றால் அவர்கள் நின்றுக்கொண்டு இருந்தாலும், உட்கார்ந்துக்கொண்டு இருந்தாலும், தூங்கினாலும் அல்லாஹ்வின் திக்ரிலே நிலைத்து நிற்பார்கள். இறை தியானத்திலே மூழ்கியிருப்பார்கள். அல்லாஹ் அஸ்ஸவஜல் மேலும் கூறும்போது, ” நீங்கள் காலையிலும், மாலையிலும் திக்ர் செய்யும் நல்லடியார்களுடன் நட்புக்கொள்ளுங்கள்” என்று எம்மைப்பார்த்து கூறுகிறான்.
” அல்லாஹ்வுடைய அவ்லியாக்களை யார் முஹப்பத் வைக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வை முஹப்பத் வைக்கிறார்கள். எவர்கள் அல்லாஹ்வை நேசிக்கிறார்களோ, அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். இப்படித்தான் ஸாலிஹீன்களும் அவ்லியாக்களை நேசித்து அவர்களும் அவ்லியாக்கள் ஆனார்கள்” என்று குத்பு ஷஃறானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் “தபகாத்துல் குப்ரா” என்ற கிதாபில் கூறியுள்ளார்கள்.
ஆனால் இன்று சில வழிக்கெட்ட கூட்டத்தார்கள் இந்த சிறப்பான வலிமார்களை அவமதித்து, அவர்களிடம் எந்த சக்தியும் இல்லை. அவர்களை ஸியாரத்து செய்யக்கூடாது. அவர்களின் பொருட்டால் வஸீலா கேட்கக்கூடாது. அவர்களுக்காக மௌலிது ஓதக்கூடாது. கந்தூரி கொடுக்கக்கூடாது என்று தப்புத்தவறாக சொல்லி, ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களை வழிக்கெடுக்கிறார்கள். இவர்களின் பேச்சை நம்பி இந்த அப்பாவி மக்களும் அவர்களின் முன்னோர்கள் செய்த இந்த நல்ல விஷயங்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள். ஆனால் விஷயம் தெரிந்த மக்கள் இவர்களின் இந்த பொய் பேச்சுகளை எல்லாம் கேட்பதில்லை. அவர்கள் எமது முன்னோர்கள் செய்து வந்ததைப்போல், வலிமார்களை கண்ணியப்படுத்துகிறார்கள். அவர்களுக்காக மௌலிது ஓதுகிறார்கள். அவர்களின் பொருட்டால் வஸீலா தேடுகிறார்கள்.
இப்படி இந்த மகத்துவமிக்க அல்லாஹ்வின் வலிமார்களை நேசிப்பவர்களைப் பார்த்து, இன்று சில வழிக்கெட்ட கூட்டத்தார்கள் “ஹுப்பு பாட்டி” என்றும், அவர்களின் துஆ பரக்கத்தை பெற அவர்களின் கப்ரு ஷரீஃபுக்கு செல்பவர்களை பார்த்து “கப்ரு வணங்கி ” என்றும் கூறி கேலி செய்து தப்புத் தவறாக பேசி பெரும் பாவத்தை செய்கிறார்கள்.
அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறியதாக கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் அறிவிக்கிறார்கள்: ” எவன் ஒருவன் எனது வலிமார்களை நோவினை செய்வானோ, அவன் என்னுடன் யுத்தம் செய்ய தயாராக இருந்துக்கொள்ளட்டும்” என்ற இந்த ஹதீஸ் ஸஹீஹுல் புகாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இப்படி அல்லாஹ்வின் எச்சரிக்கை வந்திருப்பதால் நாம் மிகக்கவனமாக இருக்கவேண்டும். வலிமார்களை தவறாகபேசினால் பெரும் பாவத்தை சம்பாதிக்கவேண்டிவரும். அல்லாஹ்வுடன் யுத்தம் செய்ய வேண்டி வரும்.
இறைநேச செல்வர்களான அவ்லியாக்கள் செய்த கடும் தவம் என்ன? இபாதத்துகள் என்ன? அவர்களைக்கொண்டு இந்த பூமி அடைந்திருக்கும் அதிர்ஷ்டங்கள் என்ன? நல்ல நசீபுகள் என்ன? இவர்களால் தான் மழையையே பொழியவைக்கிறான் என்றால் இவர்களின் சிறப்புதான் என்ன? இவ்வளவு பெரும் மதிப்பு பெற்ற அவ்லியாக்களை அல்லாஹ் நமக்கு தந்திருக்கிறான் என்றால் நாங்கள் எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள். இதை நினைத்து நெஞ்சுருகி மனமார அல்லாஹ்வுக்கு நிறைய நன்றி செலுத்த வேண்டும். அதை விட்டு விட்டு அவர்களை கேலி செய்வதால் எவ்வளவு பெரிய பாவங்களை சம்பாதிக்கிறோம்? கிருபையுள்ள அல்லாஹ் நம் அனைவரையும் இந்த வழிக்கெட்ட கூட்டங்களில் சேர்க்காமல், உண்மையான, உறுதியான, வெற்றிப்பெற்ற ஸுன்னத் – வல் – ஜமாஅத்தில் நிலைப்பெற வைப்பானாக!
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.

Monday, April 28, 2014

ahkamul kuboor


















بسم الله الرحمن الرحيم
ஆஷூரா நாளில் நடைபெற்ற அற்புத சம்பவங்கள்

நபி ஆதம் அலை அவர்களின் தவ்பா ஏற்றுக் கொள்ளப்பட்ட தினம்
فَتَلَقَّى آَدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ.. (37البقرة ) وكان ذلك في يوم عاشوراء في يوم جمعة (قرطبي) قِيلَ إِنَّ هَذِهِ الْكَلِمَات: مفسرة بقوله تالي قَالَا رَبّنَا ظَلَمْنَا أَنْفُسنَا وَإِنْ لَمْ تَغْفِر لَنَا وَتَرْحَمنَا لَنَكُونَنَّ مِنْ الْخَاسِرِينَ (الاعراف23" وسئل بعض السلف عما ينبغي أن يقوله المذنب فقال: يقول ما قاله أبواه :{ ربنا ظلمنا أنفسنا } الآية وقال موسى عليه السلام{رب إني ظلمت نفسي فاغفر لي} وقال يونس عليه السلام :{ لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين (تفسير قرطبي)
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் கரை ஒதுங்கிய நாள்
وَهِىَ تَجْرِى بِهِمْ فِى مَوْجٍ كَالْجِبَالِ وَنَادَى نُوحٌ ابْنَهُ وَكَانَ فِى مَعْزِلٍ ياَبُنَىَّ ارْكَبَ مَّعَنَا وَلاَ تَكُن مَّعَ الْكَافِرِينَ قَالَ سَآوِىإِلَى جَبَلٍ يَعْصِمُنِى مِنَ الْمَآءِ قَالَ لاَ عَاصِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلاَّ مَن رَّحِمَ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِينَ وَقِيلَ ياَأَرْضُ ابْلَعِى مَآءَكِ وَياَسَمَآءُ أَقْلِعِى وَغِيضَ الْمَآءُ وَقُضِىَ الاَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِىِّ وَقِيلَ بُعْدًا لِّلْقَوْمِ الظَّالِمِينَ (سورة هود) عن عبد العزيز بن عبد الغفور عن أبيه قال رسول الله صلى الله عليه وسلم في أول يوم من رجب ركب نوح السفينة فصام هو وجميع من معه، وجرت بهم السفينة ستةَ أشهر، فانتهى ذلك إلى المحرم، فأرست السفينة على الجوديّ يوم عاشوراء، فصام نوح ، وأمر جميع من معه من الوحش والدوابّ فصامُوا شكرًا لله -عن ابن جريج قال: كانت السفينة أعلاها للطير، ووسطها للناس وفي أسفلها السباع وكان طولها في السماء ثلاثين ذراعًا، ودفعت من عَين وردة يوم الجمعة لعشر ليالٍ مضين من رجب، وأرست على الجوديّ يوم عاشوراء،(زاد المسير)عَنِ ابْنِ عَبَّاسٍ رض كَانَ مَعَ نُوحٍ فِي السَّفِينَةِ ثَمَانُونَ رَجُلا مَعَهُمْ أَهْلُوهُمْ وَأَنَّهُمْ كَانُوا فِي السَّفِينَةِ مِائَةً وَخَمْسِينَ يَوْمًا وَأَنَّ اللَّهَ وَجَّهَ السَّفِينَةَ إِلَى مَكَّةَ فَزَارَتِ الْبَيْتَ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ وَجَّهَهَا اللَّهُ إِلَى الْجُودِيِّ فَاسْتَقَرَّتْ عَلَيْهِ فَبَعَثَ نُوحٌ الْغُرَابَ لِيَأْتِيَهُ بِخَبَرِ الأَرْضِ، فَذَهَبَ فَوَقَعَ إِلَى الْجِيَفِ يَعْنِي فَأَبْطَأَ عَلَيْهِ فَبَعَثَ الْحَمَامَةَ فَأَتَتْهُ بِوَرِقِ الزَّيْتُونِ وَلَطَّخَتْ رِجْلَيْهَا بِالطِّينِ فَعَرَفَ نُوحٌ أَنَّ الْمَاءَ قَدْ نَضَبَ فَهَبَطَ إِلَى أَسْفَلِ الْجُودِيِّ فَأَتَى قَرْيَةً وَسَمَّاهَا ثَمَانِينَ، فَأَصْبَحُوا ذَاتَ يَوْمٍ وَقَدْ تَبَلْبَلَتْ أَلْسِنَتُهُمْ عَلَى ثَمَانِينَ لُغَةً أَحَدُهَا اللِّسَانُ الْعَرَبِيُّ فَكَانَ بَعْضُهُمْ لا يَفْقَهُ كَلامَ بَعْضٍ وَكَانَ نُوحٌ يُعَبِّرُ عَنْهُمْ (تفسير ابن ابي حاتم
வானமும் தன் நீரை பொழிந்தது. பூமியும் தனக்குள் உள்ள நீரை வெளியே மேலே கொண்டு வந்தது. ஆறு மாதங்களுக்குப் பின் அல்லாஹ் வானமே நீ உன் தண்ணீரை நிறுத்திக்கொள். பூமியே நீ உன் தண்ணீரை மீண்டும் விழுங்கிக் கொள் என அல்லாஹ் உத்தரவிட்டான். அதன் படி பூமி தன்னுடைய தண்ணீரை மட்டும் தான் விழுங்கியது. வானம் பொழிந்த நீரை விழுங்கவில்லை. அவைகள் ஆறுகளாகவும், நதிகளாகவும், கடல்களாகவும் ஆகி விட்டன என்பது சிலரின் கூற்றாகும்
{وقيل يا أرض ابلعي ماءك} وقف قوم على ظاهر الآية وقالوا : إِنما ابتلعت مانبع منها ، ولم تبتلع ماء السماء فصار ذلك بحاراً وأنهاراً وهو معنى قول ابن عباس وذهب آخرون إِلى أن المراد: ابلعي ماءك الذي عليك وهو ما نبع من الأرض ونزل من السماء وذلك بعد أن غرق ما على وجه الأرض (زاد المسير)
நபி யூனுஸ் அலை அவர்களுடைய உம்மத்துக்கு வேதனை அருகில் வந்த பின் அந்த வேதனை விளக்கிக் கொள்ளப்பட்ட தினம்
عَنْ عَلِيٍّ، قَالَ:"تِيبَ عَلَى قَوْمِ يُونُسَ يَوْمَ عَاشُورَاءَ (تفسير ابن ابي حاتم)روي عن ابن مسعود وغيره: أنّ قوم يونس كانوا بأرض نِيْنَوى من أرض الموصل ، فأرسل الله تعالى إليهم يونس عليه السلام ،يدعوهم إلى الإيمان فدعاهم فأبوا فقيل له :إنّ العذاب مصبحهم إلى ثلاثة أيام فأخبرهم بذلك فقالوا: إنا لم نجرب عليك كذباً ،فانظروا فإن بات فيكم تلك الليلة فليس بشيء،وإن لم يبت فاعلموا أنّ العذاب مصبحكم فلما كان في جوف تلك الليلة خرج يونس عليه السلام من بين أظهرهم ، فلما أصبحوا تغشاهم العذاب فكان فوق رؤوسهم قدر ميل. وقال وهب : غامت السماء غيماً عظيماً ، أسود هائلاً يدخن دخاناً عظيماً فهبط حتى غشى مدينتهم واسودّت سطوحهم ، فلما رأوا ذلك أيقنوا بالهلاك ، فطلبوا يونس بينهم فلم يجدوه وقذف الله تعالى في قلوبهم التوبة، فخرجوا إلى الصعيد بأنفسهم ونسائهم وأولادهم ودوابهم ولبسوا المسوح وأظهروا الإيمان والتوبة وأخلصوا النية ، وفرّقوا بين كل والدة وولدها من النساء والدواب فحنّ بعضها إلى بعض وعلت أصواتها واختلطت بأصواتهم ، وعجوا وتضرّعوا إلى الله تعالى وقالوا آمنا بما جاء به يونس عليه السلام فرحمهم الله تعالى واستجاب دعاءهم وكشف عنهم العذاب بعد ما أظلهم. وكل ذلك يوم عاشوراء يوم الجمعة ، وقيل :خرجوا إلى شيخ من بقية علمائهم فقالوا :قد نزل بنا العذاب فما ترى ؟ فقال لهم : قولوا يا حيّ حين لا حيّ ، ويا حيّ محيي الموتى ، ويا حيّ لا إله إلا أنت. فقالوها ، فكشف عنهم. (تفسير السراج المنير)
நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் தன் பிள்ளைகளுக்கு பிரார்த்தனை செய்வதற்காக தேர்ந்தெடுத்த நாள்
قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ (97) قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (98سورة يوسف) قال ابن عباس : أخَّر دعاءه إلى السحر وقال المثنى بن الصباح عن طاوس قال : سحر ليلة الجمعة ووافق ذلك ليلة عاشوراء (قرطبي)
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கைத்தடி ராட்சத பாம்பாக மாறி, சூனியக்காரர்கள் உருவாக்கிய பாம்புகள் அனைத்தையும் விழுங்கியதும், அந்த சூனியக்காரர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றதும் இதே நாளில் தான்
قَالَ أَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ أَرْضِنَا بِسِحْرِكَ يَا مُوسَى(57)فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍ مِثْلِهِ فَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَا نُخْلِفُهُ نَحْنُ وَلَا أَنْتَ مَكَانًا سُوًى (58) قَالَ مَوْعِدُكُمْ يَوْمُ الزِّينَةِ وَأَنْ يُحْشَرَ النَّاسُ ضُحًى (59) فَتَوَلَّى فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهُ ثُمَّ أَتَى (60....قَالُوا يَا مُوسَى إِمَّا أَنْ تُلْقِيَ وَإِمَّا أَنْ نَكُونَ أَوَّلَ مَنْ أَلْقَى (65) قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى (66) فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُوسَى- قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنْتَ الْأَعْلَى (68) وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى (69) فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَى (طه) عَنِ ابْنِ عَبَّاسٍ رض أَنَّ يَوْم الزِّينَة الْيَوْم الَّذِي أَظْهَرَ اللَّه فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْن وَالسَّحَرَة يَوْم عَاشُورَاء (تفسير ابن كثير
நபி மூஸா அலை அவர்களும், அவர்களின் சமூகத்தினரும் காப்பாற்றப்பட்டு ஃபிர்அவ்னும் அவனது படையும் அழிக்கப்பட்ட நாள்
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ (بخاري) باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ -كتاب الصوم
ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட விதம் பற்றி விரிவாக...
إِنَّ بَنِي إِسْرَائِيل لَمَّا خَرَجُوا مِنْ مِصْر فِي صُحْبَة مُوسَى عَلَيْهِ السَّلَام وَهُمْ فِيمَا قِيلَ سِتّمِائَةِ أَلْف مُقَاتِل سِوَى الذُّرِّيَّة وَقَدْ كَانُوا اِسْتَعَارُوا مِنْ الْقِبْط حُلِيًّا كَثِيرًا فَخَرَجُوا بِهِ مَعَهُمْ فَاشْتَدَّ حَنَق فِرْعَوْن عَلَيْهِمْ فَأَرْسَلَ فِي الْمَدَائِن حَاشِرِينَ يَجْمَعُونَ لَهُ جُنُوده مِنْ أَقَالِيمه فَرَكِبَ وَرَاءَهُمْ فِي أُبَّهَة عَظِيمَة وَجُيُوش هَائِلَة لِمَا يُرِيدهُ اللَّه بِهِمْ وَلَمْ يَتَخَلَّف عَنْهُ أَحَد مِمَّنْ لَهُ دَوْلَة وَسُلْطَان فِي سَائِر مَمْلَكَته فَلَحِقُوهُمْ وَقْت شُرُوق الشَّمْس"فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَاب مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ" أَنَّهُمْ لَمَّا اِنْتَهَوْا إِلَى سَاحِل الْبَحْر وَفِرْعَوْن وَرَاءَهُمْ وَلَمْ يَبْقَ إِلَّا أَنْ يُقَاتِل الْجَمْعَانِ وَأَلَحَّ أَصْحَاب مُوسَى عَلَيْهِ السَّلَام عَلَيْهِ فِي السُّؤَال كَيْف الْمَخْلَص مِمَّا نَحْنُ فِيهِ؟ فَيَقُول إِنِّي أُمِرْت أَنْ أَسْلُك هَهُنَا" كَلَّا إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِي" فَعِنْدَ مَا ضَاقَ الْأَمْر اِتَّسَعَ فَأَمَرَهُ اللَّه تَعَالَى أَنْ يَضْرِب الْبَحْر بِعَصَاهُ فَضَرَبَهُ فَانْفَلَقَ الْبَحْر فَكَانَ كُلّ فِرْق كَالطَّوْدِ الْعَظِيم أَيْ كَالْجَبَلِ الْعَظِيم وَصَارَ اِثْنَيْ عَشَر طَرِيقًا لِكُلِّ سِبْط وَاحِد وَأَمَرَ اللَّه الرِّيح فَنَشَّفَتْ أَرْضه " فَاضْرِبْ لَهُمْ طَرِيقًا فِي الْبَحْر يَبَسًا لَا تَخَاف دَرْكًا وَلَا تَخْشَى" وَتَخَرَّقَ الْمَاء بَيْن الطُّرُق كَهَيْئَةِ الشَّبَابِيك لِيَرَى كُلّ قَوْم الْآخَرِينَ لِئَلَّا يَظُنُّوا أَنَّهُمْ هَلَكُوا وَجَاوَزَتْ بَنُو إِسْرَائِيل الْبَحْر فَلَمَّا خَرَجَ آخِرهمْ مِنْهُ اِنْتَهَى فِرْعَوْن وَجُنُوده إِلَى حَافَّته مِنْ النَّاحِيَة الْأُخْرَى وَهُوَ فِي مِائَة أَلْف أَدْهَم فَلَمَّا رَأَى ذَلِكَ هَالَهُ وَأَحْجَمَ وَهَابَ وَهَمَّ بِالرُّجُوعِ وَهَيْهَاتَ نَفَذَ الْقَدَر وَاسْتُجِيبَتْ الدَّعْوَة وَجَاءَ جِبْرِيل عَلَيْهِ السَّلَام عَلَى فَرَس وَدِيق حَائِل فَمَرَّ إِلَى جَانِب حِصَان فِرْعَوْن فَحَمْحَمَ إِلَيْهَا وَاقْتَحَمَ جِبْرِيل الْبَحْر فَاقْتَحَمَ الْحِصَان وَرَاءَهُ وَلَمْ يَبْقَ فِرْعَوْن يَمْلِك مِنْ نَفْسه شَيْئًا فَتَجَلَّدَ لِأُمَرَائِهِ وَقَالَ لَهُمْ لَيْسَ بَنُو إِسْرَائِيل بِأَحَقّ بِالْبَحْرِ مِنَّا فَاقْتَحَمُوا كُلّهمْ عَنْ آخِرهمْ وَمِيكَائِيل فِي سَاقَتهمْ لَا يَتْرُك مِنْهُمْ أَحَدًا إِلَّا أَلْحَقَهُ بِهِمْ فَلَمَّا اسْتَوْسَقُوا فِيهِ وَتَكَامَلُوا وَهَمَّ أَوَّلهمْ بِالْخُرُوجِ مِنْهُ أَمَرَ اللَّه الْقَدِير الْبَحْرَ أَنْ يَرْتَطِم عَلَيْهِمْ فَارْتَطَمَ عَلَيْهِمْ فَلَمْ يَنْجُ مِنْهُمْ أَحَد وَجَعَلَتْ الْأَمْوَاج تَرْفَعهُمْ وَتَخْفِضهُمْ وَتَرَاكَمَتْ الْأَمْوَاج فَوْق فِرْعَوْن وَغَشِيَتْهُ سَكَرَات الْمَوْت فَقَالَ وَهُوَ كَذَلِكَ آمَنْت أَنَّهُ لَا إِلَه إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيل وَأَنَا مِنْ الْمُسْلِمِينَ" فَآمَنَ حَيْثُ لَا يَنْفَعهُ الْإِيمَان (تفسير ابن كثير)
ஃபிர்அவ்னின் உடல் இன்று வரை பாதுகாப்பாக இருப்பது உலக மக்களுக்கு மாபெரும் படிப்பினை
فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ (يونس92)
உனது உடலை நாம் பாதுகாப்போம் என்ற இறை வசனத்திற்கேற்ப ஃபிர்அவ்னின் உடல் கி.பி. 1889 இல் கண்டு பிடிக்கப்பட்டு எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு கொண்டு வரப்பட்டு 1907 முதல் அரச சடலங்கள் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1975 –ல் இது பரிசோதிக்கப்பட்டு நீரில் மூழ்கி இறந்த ஃபிர்அவ்னின் உடல் தான் என்று முடிவு செய்யப்பட்டது. மற்ற அரச சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட போது ஃபிர்அவ்னின் சடலம் மட்டும் உருக்குலையாமல் கண்டெடுக்கப்பட்டது குர்ஆனின் கூற்றை உண்மைப்படுத்துவதாகும்
நூஹ் அலைஹிஸ்ஸலாம் உடைய கப்பலும் இன்று வரை பாதுகாக்கப்படுகிறது
முதல் உலக யுத்தத்தின் போது விளாடி மீர் என்ற ரஷ்ய விஞ்ஞானி ஆர்மீனியா மலைத் தொடரிலுள்ள ஜூதி என்ற மலை உச்சியில் பனிப்படலத்திற்கு அடியில் கப்பல் ஒன்று இருப்பதை கண்டு பிடித்துச் சொன்ன போது மாஸ்கோவிலிருந்து சில ஆராய்ச்சிக் குழுவினர் சென்று பனிப்பாறைகளை பிளந்து அந்த கப்பலை முழுவதுமாக ஆராய்ந்தனர். அதில் பல பெரிய அறைகளும் பல சிறிய அறைகளும் இருந்தன. ரஷ்ய புரட்சியின் காரணமாக அந்த ஆராய்ச்சி முடிவுகள் பிரபலமடையவில்லை. பிறகு துருக்கி நாட்டிலிருந்து ஒரு குழுவினர் ஒரு ஐரோப்பிய நிபுணருடன் சென்று ஆராய்ந்து அந்த கப்பல் கோபர் என்ற ஒரு வகை சவுக்கு மரத்தினால் செய்யப்ப்பட்டது என்றும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் அந்த மரம் தாக்குப்பிடிக்காது என்றாலும் பனிப்படலங்கள் அந்த கப்பலை சுமார் 5000 வருடங்களாக காத்து வருகிறது என்றும் கண்டு பிடித்துள்ளனர். சில வருடங்களுக்கு முன் “அராரத் மலைச் சிகரத்தில் கண்டு பிடிக்கப்ட்டது பைபிளில் கூறப்பட்ட நோவாவின் கப்பலா? என்ற தலைப்பில் தினத்தந்தியில் கட்டுரை வெளியானது
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் வானத்திற்கு உயர்த்தப்பட்டதும் இந்த தினத்தில்...
وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى بْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا (157) بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا (النساء158) وقال الضحاك : رفعه في يوم عاشوراء بين صلاتي المغرب والعشاء . (بحر العلوم)
ஆஷூரா நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ (بخاري) باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ -كتاب الصوم- عن بْن عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (مسلم) بَاب أَيُّ يَوْمٍ يُصَامُ فِي عَاشُورَاءَ-كِتَاب الصِّيَامِ
ويقال : أربعين ليلة كانت ثلاثين ليلة منها من ذي القعدة وعشراً من ذي الحجة . وقال بعضهم : ثلاثين كانت من ذي الحجة وعشراً من المحرم وكانت مناجاته يوم عاشوراء .
وذلك أن اليهود لما اجتمعوا على قتله هرب منهم ودخل في بيت ، فأمر ملك اليهود رجلاً يدخل البيت يقال له يهوذا ويقال ططيانوس ، فجاء جبريل عليه السلام ورفع عيسى عليه السلام إلى السماء ، فلما دخل الرجل إلى البيت لم يجده ، فألقى الله شبه عيسى عليه ، فلما خرج ظنوا أنه عيسى فقتلوه وصلبوه . ثم قالوا : إن كان هذا عيسى فأين صاحبنا؟ وإن كان هذا صاحبنا فأين عيسى؟ فاختلفوا فيما بينهم ، فأنزل الله تعالى إكذاباً لقولهم فقال : { وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ ولكن شُبّهَ لَهُمْ } يعني ألقي شبه عيسى على غيره فقتلوه . ثم قال { وَإِنَّ الذين اختلفوا فِيهِ لَفِى شَكّ مّنْهُ } أي من قتله { مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ } يعني لم يكن عندهم علم يقين أنه قتل أو لم يقتل { إِلاَّ اتباع الظن } أي قالوا قولاً بالظن { وَمَا قَتَلُوهُ يَقِيناً } أي لم يستيقنوا بقتله ، ويقال : يقيناً ما قتلوه { بَل رَّفَعَهُ الله إِلَيْهِ }
عَنْ قَتَادَةَ: " وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ " "أَبْقَاهَا اللَّهُ فِي أَرْضِ الْجَزِيرَةِ عَبَرُوا بِهِ حَتَّى رَآهَا أَوَائِلَ هَذِهِ الآيَةِ: وَكَمْ مِنْ سَفِينَةٍ قَدْ كَانَتْ بَعْدَهَا، فَهَلَكَتْ بَعْدَهَا وَصَارَتْ رَمْزًا".

கப்றுகள் தரைமட்டமாக்கப்படவேண்டுமென்பது நபி வழி அல்ல.



-மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) BBA(Hons)-

கப்றுகள் எவ்வாறு அமைக்கப்பவேண்டும் என்பது பற்றி முஸ்லிம்களிடையே பல்வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. கப்றுகளின் மேல் காணப்படும் மண் பூமி மட்டத்துடன் சமனானதாக ஆக்கப்படவேண்டுமெனவும் கப்றுகளைச் சூழ அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், நிழல்தரும் மேற்பரப்புகள் உடைக்கப்பட வேண்டுமெனவும் சிலர் கூறுகின்றனர். இந்த அடிப்டையில் “கப்றுகளைச் சூழ கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உடைக்கப்பவேண்டும்” என முதலில் தீர்ப்பு வழங்கியவர் இப்னுதைமிய்யஹ் என்பவர்தான்.
(ஸாதுல் மஆத் – பக்கம் 661).

இது இஸ்லாமிய மார்கத்தீர்ப்பு அல்ல. அதாவது அல்குர்ஆன்,அல்ஹதீஸ், அல் இஜ்மாஉ,அல்கியாஸ் ஆகிய நான்கு மூலாதாரங்களின் அடிப்டையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல. இந்த தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு படித்தவர்களும் பாமரர்களும் கப்றுகளை உடைத்தெறியவேண்டும் எனகோஷமிடுகின்றனர்.

அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில்

ومن يعظـّـم شعائِر الله فإنـّـها من تقوى القلوب (حج – 32)

“யார் அல்லாஹ்வின் சின்னங்களைகண்ணியம்செய்கின்றானோ அது இறையச்சத்தில் நின்றுமுள்ளது” என கூறுகின்றான்.(ஹஜ்-32)
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின் சின்னம் என்பது அல்லாஹ்வை நினைவுபடுத்தக்கூடியதை குறிக்கின்றது. எந்த வஸ்து அல்லாஹ்வை நினைவுபடுத்துகிறதோ அது அல்லாஹ்வின் சின்னம் ஆகும்.

இந்த அடிப்டையில்

انّ الصفا والمروة من شعائِر الله (البقرة-158

ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின்சின்னங்களில் நின்றுமுள்வையாகும்.
( அல்பகறஹ்-158)
وَالْبُدْنَجَعَلْنَاهَالَكُمْمِّنشَعَائِرِاللَّهِ(الحج:36)

உழ்ஹிய்யஹ்வுக்காக எடுத்துச்செல்லப்படும் பிராணிகளை நாம் அல்லாஹ்வின்சின்னங்களில் நின்றுமுள்வையாக ஆக்கியுள்ளோம்.(ஹஜ்-36)

மேற்குறிப்பிடப்பட்ட திருவசனங்களில் ஸபாவும் மர்வாவும் உழ்ஹிய்யஹ்வுக்காக எடுத்துச்செல்லப்படும் பிராணிகளும் அல்லாஹ்வின் சின்னங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இவை கண்ணியம்செய்யப்படவேண்டிவையாகும்.

கஃபதுல்லாஹ்,ஹஜறுல் அஸ்வத், ஸபா,மர்வா,மினா, அறபஹ் போன்ற புனித தலங்கள் அல்லாஹ்வின் சின்னங்கள் ஆகும். இவை கண்ணியம் செய்யப்படவேண்டிவையுமாகும்.

ஆயினும் இவையாவும் கல்லினாலும் மண்ணினாலும் படைக்கப்பட்டவையாகும். இருப்பினும் அல்லாஹ்வின்சின்னங்கள் என்ற அடிப்படையில் அவை கண்ணியம் செய்யப்படுகின்றன.

உதாரணமாக கஃபதுல்லாஹ்வுக்குபோர்வைபோர்த்துதல்,ஹஜறுல் அஸ்வத் கல்லைமுத்தமிடுதல்போன்று.

அவ்வாறாயின் அல்லாஹ்வின் பெரியசின்னங்களான அவனது தூதை கொண்டுவந்த நபீமார்கள்,அவர்களின் வாரிசுகளான வலீமார்கள் எந்த அளவு கண்ணியம் செய்யப்பவேண்டியவர்கள் என்பதை நாம் இங்கு சிந்திக்கவேண்டும்.

அதபோல் உழ்ஹிய்யஹ்வுக்காக எடுத்துச்செல்லப்படும் பிராணி என்ற காரணத்தினால் குறித்த பிராணிஅல்லாஹ்வின்சின்னம் என்றாகிறது. அதன் காரணமாக கண்ணியம் செய்யப்படுகின்றது. அவ்வாறாயின் நபீமார்கள், வலீமார்கள் எந்த அளவு கண்ணியம் செய்யப்பவேண்டியவர்கள் என்பதையும் நாம் இங்கு சிந்திக்கவேண்டும்.

இந்த அடிப்டையில் நாம் பார்க்கும்போது நபீமார்கள், வலீமார்கள் வாழும் கப்றுகளை அழகாக கட்டுவதும், அவற்றை சுத்தமாகவைத்திருப்பதும்தான் அவர்களுக்குசெய்யும் கண்ணியமே தவிர அவர்களின் கப்றுகளை உடைப்பதும் அவற்றை அசுத்தப்படுத்துவதும் அவர்களுக்குசெய்யும் கண்ணியம் அல்ல.

கப்றுகளைச் சூழ அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள்,நிழல்தரும் மேற்பரப்புகள் உடைக்கப்படவேண்டும் என்றும் கப்றுகளின் மண் பூமி மட்டத்துடன் சமனானதாக ஆக்கப்படவேண்டுமென்றும் கூறுபவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் ​கொண்டு அவ்வாறு கூறுகின்றனர் காரணம் இந்த ஹதீதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டமையாகும்

بابالأمربتسويةالقبر 

ـحدّثنايَحْيَىبْنُيَحْيَىوَأَبُوبَكْرِبْنُأَبِيشَيْبَةَوَزُهَيْرُبْنُحَرْبٍقَالَيَحْيَى: أَخْبَرَنَا. وَقَالَالآخَرَانِ: حَدَّثَنَاوَكِيعٌعَنْسُفْيَانَ،عَنْحَبِيبِبْنِأَبِيثَابِتٍ،عَنْأَبِيوَائِلٍعَنْأَبِيالْهَيَّاجِالأَسْدِيِّقَالَ: قَالَلِيعَلِيُّبْنُأَبِيطَالِبٍ، : أَلاَّأَبْعَثُكَعَلَىمَابَعَثَنِيعَلَيْهِرَسُولُاللّهِ؟أَنْلاَتَدَعَتِمثْالاًإِلاَّطَمَسْتَهُ. وَلاَقَبْراًمُشْرِفاًإِلاَّسَوَّيْتَهُ 

அபுல் ஹய்யாஜ் அல் அஸதீ(றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் அலீ இப்னு அபீதாலிப்(றழி) அவர்கள் எனக்கு கூறினார்கள். என்னை நபீ(ஸல்) அவர்கள் அனுப்பிய விடயத்தின் மீது நான் உன்னை அனுப்புகிறேன்.”விக்கிரகங்களை அழிக்காமல் விட்டு விடாதே,உயர்ந்துள்ள கப்றுகளை சீராக்காமல் விட்டு விடாதே” 
ஆதாரம் – முஸ்லிம் 
ஹதீஸ் இலக்கம் – 2196 

இந்த ஹதீஸ் துர்முதீ-1043,முஸ்னத் அஹ்மத்-1067,நஸாயீ-2031, ஸூனன் அபூதாவூத்-3220 ஆகிய இடங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

இந்த ஹதீதில் கப்றுகள் உடைக்கப்படவேண்டுமென கூறப்படவில்லை. 

இந்த ஹதீதில் இடம்பெற்றுள்ள سَوَّيْتَهஎன்றசொல்லுக்கு“உடைத்தல்”அல்லது “தகர்த்தல்” என தவறாக பொருள்கொள்வதே கப்றுகள் உடைக்கப்படவேண்டுமென சிலர் கூறுவதற்கு காரணமாகும். இந்த சொல் تسوية என்றசொல்லடியில் இருந்து வந்ததாகும்.تسوية என்றால் “சீராக்குதல்” அல்லது”செம்மையாக்குதல்” என்பது கருத்தாகும். இந்தக்கருத்தின் அடிப்படையிலேயே அறபுமொழி நடையில் இது பாவிக்கப்படுகின்றது. تسوية என்றசொல் “உடைத்தல்” அல்லது “தகர்த்தல்” என்ற பொருளில் அறபுமொழி நடையில் எந்த இடத்திலும் பாவிக்கப்படவில்லை. 

கப்றுகள் பூமியின் மட்டத்திற்கு சமனாக ஆக்கப்படவேண்டும் என்பதுதான்மேற்குறிப்பிடப்பட்ட ஹதீதின் கருத்து என்றிருந்தால் ஹதீதின் வசனம் (وَلاَقَبْراًمُشْرِفاًإِلاَّسَوَّيْتَهُ (بالارض “உயர்ந்துள்ள கப்றுகளை (பூமியுடன்) சீராக்காமல் விட்டு விடாதே”என வந்திருக்கவேண்டும். அவ்வாறு ஹதீதில் வரவில்லை. எனவே இந்த ஹதீதின் சரியானபொருள் என்னவென்பதை ஹதீஸ் விரிவுரையாளர்களின் கருத்துக்களிலிருந்து நாம் நோக்குவோம். இமாம் நவவீ(றஹ்) அவர்கள் ஸஹீஹ் முஸ்லிம் விரிவுரையில் கூறுகின்றார்கள் 


قوله: (يأمربتسويتها). وفيالروايةالأخرى: ولاقبراًمشرفاًإلاسويته. فيهأنالسنةأنالقبرلايرفععلىالأرضرفعاًكثيراًولايسنمبليرفعنحوشبرويسطحوهذامذهبالشافعيومنوافقه، 

“கப்றுகள் பூமி மட்டத்திலிருந்து அதிகமாக உயர்தப்படமாட்டாது, திமில் போன்ற வடிவத்திலும்அமைக்கப்படமாட்டாது.ஆனால் ஒரு சாண் அளவு உயர்த்தப்படும் அத்துடன் (தட்டையான) முகடு அமைக்கப்படும்.இதுவே இமாம் ஷாபிஈ(றஹ்) அவர்களின் மத்ஹப் ஆகும்.”
(ஷறஹுந்நவவீ -பாகம்07,பக்கம்32)

இமாம் கஸ்தல்லானீ(றஹ்) இர்ஷாதுஸ்ஸாரீ எனும் ஸஹீஹுல் புஹாரீ விரிவுரையில்கூறுகின்றார்கள்

لأنـّه لم يرد تسويته بالارض وإنـّما اراد تسطيحه 

“கப்றுகள் பூமியின் மட்டத்திற்கு சமனாக ஆக்கப்படவேண்டும் என்பது ஹதீதின் நோக்கமல்ல.(தட்டையான)முகடு அமைக்கப்படுவதே ஹதீதின் நோக்கமாகும்”
(இர்ஷாதுஸ்ஸாரீ பாகம் 02, பக்கம் 477)

மேலும் குறித்த ஹதீதை பதிவுசெய்த இமாம் முஸ்லிம், இமாம் துர்முதீ,இமாம் நஸாயீ,இமாம் அபூதாவூத் ஆகியோர் இந்த ஹதீதைبابالأمربتسويةالقبر

“கப்றை சீராக்குமாறு அல்லது செம்மையாக்குமாறு கட்டளையிடும் பாடம்” என்ற தலைப்பின் கீழ் பதிவுசெய்துள்ளார்களே தவிர

وهدمهاباب الامر بتخريب القبور

“கப்றுகளை உடைத்துவிடுமாறுகட்டளையிடும் பாடம்” என்ற தலைப்பின் கீழ் பதிவுசெய்யவில்லை.

எனவே குறித்த ஹதீதை பதிவுசெய்த இமாம்கள் கப்றுகள் உடைக்கப்பவேண்டும் அல்லது கப்றுகள் பூமியின் மட்டத்திற்கு சமனாக ஆக்கப்படவேண்டும் என்ற கருத்திலுள்ளவர்கள் அல்ல என்பது தெளிவாகின்றது.

மேலும் அல்பிக்ஹு அலல் மதாஹிபில் அர்பஅஹ் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது

الفقهعَلَى المَذاهب الأرْبَعَة ويندب ارتفاع التراب فوق القبر بقدر شبر، ويجعل كسنام البعير، باتفاق ثلاثة، وقال الشافعية: جعل التراب مستوياً منظماً أفضل من كونه كسنام البعير،

ஹனபீ,மாலிகீ,ஹன்பலீ ஆகிய மூன்று மத்ஹபுகளின் கருத்தின்படி “கப்றுக்குமேல் மண் ஒரு சாண் அளவு உயர்தப்படுவதும் அது ஒட்டகத்தின் திமில் போன்ற வடிவத்தில் அமைக்கப்படுவதும் ஸுன்னத்தாகும்”.

ஷாபிஈ மத்ஹபின் கருத்தின்படி “கப்றின் மண் ஒழுங்காகவும் சீரானதாகவும் ஆக்கப்படுவது ஒட்டகத்தின் திமில் போன்ற வடிவத்தில் அமைக்கப்படுவதை விட சிறப்பானதாகும்”

மேற்குறிப்பிடப்பட்ட விபரங்களின் படி “கப்றுகள் பூமியின் மட்டத்திற்கு சமனாக ஆக்கப்படவேண்டும்” என்ற கருத்தும் “கப்றுகள் உடைக்கப்படவேண்டும்” என்ற கருத்தும் தவறானது என்பது தெளிவாகின்றது. அத்துடன் கப்றுகளின் மண் ஒரு சாண் அளவு உயர்தப்படவேண்டும் என்பதுவே ஹதீஸ் கலை இமாம்களினதும்,மத்ஹபுடைய இமாம்களினதும் தெளிவான முடிவாகும் என்பதும் எமக்கு தெளிவாகின்றது.

நபி(ஸல்) அவர்களின் புனித கப்று எவ்வாறு அமைந்திருந்தது என்பதை பின் வரும் ஹதீதின் மூலம் புரிந்துகொள்ளமுடியும்.


ـحدثناأَحْمَدُبنُصَالِححدثناابنُفدَيْكٍأخبرنيعَمْرُوبنُعُثْمَانَبنِهَانىءٍعنالْقَاسِمِ،قال: دَخَلْتُعَلَىعَائِشَةَفَقُلْتُ: يَاأُمَّهْاكْشِفِيلِيعَنْقَبْرِرَسُولِاللهصلىاللهعليهوسلّموَصَاحِبَيْهِرَضِيَاللهعَنْهُمَافَكَشَفَتْلِيعَنْثَلاَثَةِقُبُورٍلاَمُشْرِفَةٍوَلاَلاَطِئَةٍ،مَبْطُوحَةٍبِبَطْحَاءِالْعَرْصَةِالْحَمْرَاءِ. قالأبُوعَلِيٍّ: يُقَالُإنَّرَسُولَاللهصلىاللهعليهوسلّممُقَدَّمٌوَأبُوبَكْرٍعِنْدَرَأْسِهِوَعُمَرُعِنْدَرِجْلَيْهِرَأْسُهُعِنْدَرِجْلَيْرَسُولِاللهصلىاللهعليهوسلّم

காஸிம் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.நான் ஆயிஷா(றழி) அவர்களின் வீட்டுக்கு நான் சென்றேன். நபி(ஸல்) அவர்களின் புனித கப்றையும் அவர்களின்தோழர்கள் இருவரின் கப்றுகளையும் திறந்து காட்டுமாறுகேட்டுக்கொண்டேன்.அவர்கள் எனக்கு மூன்று கப்றுகளையும் திறந்து காட்டினார்கள். அவை அதிக உயரமாவையாகவு மிருக்கவில்லை,பூமியுடன் சமனானதாகவுமிருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் முற்டுத்தப்பட்டவர்களகவும் அபூபக்ர்ஸித்தீக்(றழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலைக்கு நேராகவும் உமர்(றழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் கால்களுக்குநேராகவும் அடக்கம்செய்யப்பட்டிருந்தனர் என கூறப்படுவதாக அபூ அலீ (றழி) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் – ஸுனன் அபூதாவூத் 
ஹதீஸ் இலக்கம் – 3222 

மேற்குறிப்பிடப்பட்ட ஹதீதில் நபி(ஸல்) அவர்களினதும் அவர்களின் தோழர்களான அபூபக்ர்ஸித்தீக்(றழி), உமர்(றழி) ஆகிய இருவரினதும் புனித கப்றுகள் “அதிக உயரமாவையாகவுமிருக்கவில்லை,பூமியுடன் சமனானதாகவுமிருக்கவில்லை” என்று கூறப்பட்டுள்ளது. எனவே சாதாரண உயரத்துடன் காணப்பட்டன என்பதும். குறிப்பாக அவை பூமியுடன் சமனானதாக இருக்கவில்லை என்பதும் தரைமட்டமானதாக இருக்கவுமில்லை என்பதும் தெளிவாகின்றது.

கப்றுகள் பூமியுடன் சமனானதாகத்தான் அமைக்கப்படவேண்டும் என்பது நபி(ஸல்) அவர்களின் கட்டளையாக இருந்தால் ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களினதும், அவர்களின் இருதோழர்களினதும் புனித கப்றுகளை பூமியுடன் சமனானதாக அல்லது தரைமட்டமானதாக ஆக்கியிருப்பார்கள். அவ்வாறில்லையாதலால் அவற்றை சாதாரண உயரமானவையாக அமைத்திருந்தார்கள்.

கப்றுகளை சூழ கட்டடங்கள்,நிழல்தரும் கூரைகள் அமைப்பது ஹறாம் என்றுசொல்பவர்கள் பின்வரும்ஹதீதை ஆதாரமாகக்கொள்வதுண்டு.


ـحدّثناأَبُوبَكْرِبْنُأَبِيشَيْبَةَحَدَّثَنَاحَفْصُبْنُغِياثٍعَنِابْنِجُرَيْجٍ،عَنْأَبِيالزُّبَيْرِ. عَنْجَابِرٍ،قَالَ: نَهَىرَسُولُاللّهِأَنْيُجَصَّصَالْقَبْرُوَأَنْيُقْعَدَعَلَيْهِ . وَأَنْيُبْنَىعَلَيْهِ.

கப்றின் மீது சாந்து பூசுவதையும் அதன்மீது அமர்தையும் அதன் மீது கட்டுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
ஆதாரம் – முஸ்லிம் 
ஹதீஸ் இலக்கம் – 2198 
அறிவிப்பு – ஜாபிர்(றழி) 

மேற்குறிப்பிடப்பட்ட ஹதீதின் கருத்தை தரக்கூடிய பலஹதீதுகள் துர்முதீ,இப்னுமாஜஹ்,நஸாயீ, முஸ்னத்அஹ்மத் போன்ற ஹதீஸ்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. இந்த ஹதீதை அடிப்டையாகக் கொண்டு கப்றை சூழ கட்டடம் கட்டுவது ஹறாம் என சிலர் கூறுகின்றனர்.

இங்கு நபி(ஸல்) அவர்கள்சாந்து பூசுதையும்,கட்டுவதையும் தடுத்துள்ளது ஹறாம் என்ற அடிப்படையில் அல்ல. மக்றூஹ் என்ற அடிப்டையில்தான். என்பதை ஹதீஸ் வரிவுரையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். காரணம் இமாம் துர்முதீ(றஹ்) அவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட ஹதீதை

بابُمَاجَاءَفيكَرَاهِيَةِتَجْصِيِصالْقُبُور

“கப்றின் மீது சாந்து பூசுவது மக்றூஹ் என்பதில் தொடர்பானது” என்ற தலைப்பின் கீழ் பதிவுசெய்துள்ளார்கள்.

எனவே இமாம் துர்முதீ(றஹ்) அவர்கள் இந்த விடயத்தை மக்றூஹ்என குறிப்பிட்டுள்ளார்களே தவிர ஹறாம் என்று குறிப்பிடவில்லை.

ஒரு ஹதீதை விளங்கும்போது அந்த ஹதீதை பதிவுசெய்த இமாமின் கருத்து முக்கியத்துவம்பெறுகின்றது. காரணம் அவர்கள் ஹதீஸ் அறிவிப்பாளரிடம் இருந்து ஹதீதைபெற்றவர்கள். எந்த சூழலில் எந்தக்காரணத்திற்காக குறித்த ஹதீதை நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்பதைகேட்டறிந்தவர்கள். குறித்த ஹதீதை ஒத்த பல்வேறு ஹதீஸ்களை அறிந்தவர்கள்.குறித்த ஹதீதை அடிப்டையாகக் கொண்ட ஸஹாபாக்களின் நடைமுறையை புரிந்தவர்கள். எனவே அவர்களின் கருத்து முக்கியத்துவம்பெறுகின்றது.

இந்த அடிப்டையில் மத்ஹபுடைய இமாம்களின் கருத்தும் முக்கியமானதாகும்.காரணம் இவர்கள் ஹதீதுடைய இமாம்களுக்கு முற்பட்டவர்கள். ஹதீஸ்கள் தொடர்பானமேற்கூறப்பட்ட விடயங்ளை நன்கறிந்தவர்கள்.

எனவே,ஷாபிஈ,ஹனபீ,மாலிகீஆகிய மூன்று மத்ஹபுகளின் கருத்தின்படி கப்றை சூழ கட்டடங்கள் அமைப்பது மக்றூஹாகும். அது பொதுமையவாடியாக இருந்தால் ஹறாம் ஆகும்.

ஹன்பலீ மத்ஹபின் கருத்தின்படிபொதுமையவாடியாக இருந்தாலும் சரி வேறு இடமாக இருந்தாலும் சரி கப்றை சூழ கட்டடங்கள் அமைப்பது மக்றூஹாகும்.

இந்த அடிப்டையில்தான் ஸஹாபாக்கள் மேற்குறித் ஹதீதை விளங்கி நடை முறைப்படுத்தினர்.

நபி(ஸல்) அவர்கள் மரணித்த போது ஸஹாபாக்கள் அவர்களின் திருவுடலை ஆயிஷா(றழி) அவர்களின் வீட்டில் நல்லடக்கம்செய்தனர்.

நபி(ஸல்) அவர்கள், கப்றை சூழ கட்டடம் கட்டுவது ஹறாம் என்றுசொல்லியிருந்தால் நபி(ஸல்)அவர்களின் திருவுடலை கட்டப்பட்ட வீட்டினுள் எவ்வாறு நல்லடக்கம்செய்ய முடியும்?.

கட்டப்பட்ட கட்டடத்தினுள் நல்லடக்கம்செய்வதோ அல்லது நல்லடக்கம்செய்துவிட்டு கட்டடம் அமைப்பதோ ஹறாம் அல்ல என்ற காரணத்தினால்தான் ஸஹாபாக்கள் அவ்வாறுசெய்தார்கள்.

நபி(ஸல்) அவர்களை மாத்திரமல்ல அவர்களின் தோழர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் கலீபா ஹஸ்ரத் அபூபக்ர் ஸித்தீக்(றழி) அவர்களையும்,இரண்டாம் கலீபா ஹஸ்ரத் உமர்(றழி) அவர்களையும் இவ்வாறேநபி(ஸல்) அவர்களுக் அருகில் கட்டப்பட்ட வீட்டினுள்ஸஹாபாக்கள்நல்லடக்கம்செய்தார்கள்.

கப்றுகளை சூழ அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள்,நிழல்தரும் மேற்பரப்புகள் உடைக்கப்படவேண்டும் என்பதுதான் நபி(ஸல்) அவர்களின் கட்டளை என்றிருந்தால் ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களையும் அவர்களின் இரு தோழர்களையும் கட்டப்பட்ட வீட்டினுள்நல்லடக்கம் செய்திருக்கமாட்டார்கள்.

எனவே ஸஹாபாக்கள், கப்றுகள் உடைக்கப்படவேண்டுமென்ற கொள்கையிலுள்ளவர்கள் அல்ல. கப்றுகள் உடைத்து தரைமட்டமாக்கப்படவேண்டுமென்பது நபி வழி அல்ல.

வஸீலா என்பது நல்லமல்களையோ நல்ல மனிதர்களையோ நல்ல மனிதர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களையோ இறைவன் சமூகத்தில் முன்னிலைப்படுத்தி வைத்து அவர்களின் அல்லது அவைகளின் பொருட்டால் தனது நாட்டம் நிறைவேறுவதை ஆதரவு வைத்தலாகும்.

நல்லமல்களை வஸீலாவாக்குவதற்குரிய ஆதாரம்

மூன்று நபர்கள் ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கையில் மழைப் பிடித்துக் கொண்டது. உடனே அருகிலுள்ள ஒரு மலைக் குகைக்குள் ஒதுங்கினார்கள். சிறிது நேரத்தில் மலையின் உச்சியிலிருந்து ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு வந்து அவர்கள் தங்கியிருந்த குகையின் வாசலை நன்றாக அடைத்துக் கொண்டதால் வெளியேற வழியில்லாமல் திகைத்து நின்றனர். அப்போது நாம் ஒவ்வொருவரும் தத்தமது வாழ்க்கையில் செய்த நல்லமல்களை இறைவன் சமூகத்தில் எடுத்துக்கூறி அவைகளை வஸீலாவாக்கி துஆ செய்வோம் என்று முடிவு செய்தார்கள்.

அதன்படி முதலாமவர் கூறினார் : இறைவா! எனக்கு வயோதிகமான பெற்றோர்களும் பல சிறு குழந்தைகளும் இருந்தனர். ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் பாலைக் கறந்து என் பெற்றோர்களுக்கு கொடுத்த பின்புதான் குழந்தைகளுக்குக் கொடுப்பது என் வழமையாக இருந்தது. ஆனால் ஒருநாள் வீடு திரும்ப தாமதமாகி விட்டது. வீடு வந்து சேர்ந்தவுடன் அவசரஅவசரமாக பாலைக் கறந்து பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு என் பெற்றோர்களிடம் சென்றேன். ஆனால் அவர்களோ உறங்கிவிட்டார்கள். அவர்களை எழுப்பிக் கொடுத்து விடலாம் என்று பார்த்தால் அவர்களின் உறக்கம் கலைந்து விடுமே என்று எண்ணி எழுப்ப மனமில்லாமல் அபப்டியே பால் பாத்திரத்தை ஏந்திய வண்ணமே நின்று கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய பச்சிளம் குழந்தைகளோ என் காலைச்சுற்றி கொண்டு பசியின் கொடூரம் தாங்காமல் பாலைக் கேட்டுக் கூச்சலிட்டனர். அப்படியிருந்தும் என் பெற்றோர்கள் அவர்களாகவே விழித்து பாலை அருந்தட்டும். அதன் பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் பால் பாத்திரத்தை கையில் ஏந்தியவனாய் ஸுப்ஹு வரை நின்றேன். இந்த நற்காரியத்தை உன் திரு முகத்திற்காக (திருப்பதியைப் பெறுவதற்காக) செய்தேன் என்பதை நீ நன்கு விளங்கியிருக்கிறாய். ஆகவே அந்த நற்செயலை முன்னிலைப்படுத்தி (வஸீலாவாக்கி) வேண்டுகிறேன். என் பிரார்த்தனையை ஒப்புக் கொண்டு இந்த குகையின் வாசலை மூடிக் கொண்டிருக்கும் பாறாங்கல்லை அகற்றி வானம் தெரிகின்ற அளவிற்கு இடைவெளியை ஏற்படுத்தித் தருவாயாக என்று பிரார்த்தித்தார். அதன்படி அல்லாஹு தஆலா அவரின் துஆவை கபூல் செய்து அந்தப் பாறாங்கல்லை அகற்றி வானத்தின் வெளிச்சம் தெரியும் அளவிற்கு கிருபை செய்தான்.

இரண்டாமவர் தனது துஆப் படலத்தை துவக்கினார். இறைவா! எனது சிறிய தகப்பனாரின் மகளை மிகவும் அதிகப்படியாக விரும்பினேன். ஆகவே என் இச்சைக்கு இணங்குமாறு கேட்டுக் கொண்டேன். 100 தங்க நாணயங்கள் தந்தாள் இணங்குவதாக கூறினால். உடனே 100 தங்க நாணயங்களை சேகரிக்க முயற்சித்தேன். 100 தீனார் தேறியதும் அதை அவளிடம் கொடுத்து விட்டு காம வேட்கையுடன் அவளின் இரண்டு கால்களுக்குமிடையே அமர்ந்துவிட்டேன். அந்நேரத்தில் அல்லாஹ்வின் அடியானே அல்லாஹ்வைப் பயந்து கொள். எனது கன்னியை அழித்து விடாதே என்றாள். அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே அவளை விட்டும் எழுந்துவிட்டேன். இறைவா! இந்த நற்செயலை உன் திரு முகத்திற்காக (திருப்பதியைப் பெறுவதற்காக) செய்தேன் என்பதை நீ அறிந்திருந்தால் இந்த பாறாங்கல்லை இன்னும் கொஞ்சம் அகற்றித் தருவாயாக என்றார். அதன்படி இறைவன் அகற்றிக் கொடுத்தான்.

இனி மூன்றாமவர் கூறினார் : இறைவா! 16 ராத்தல் அரிசி தருவதாகக் கூறி ஒருவரைக் கூலிக்கு அமர்த்தினே. அவர் வேலை செய்து முடித்த போது எனக்கு உரிய கூலியைக் கொடு என்றார். அவருக்குச் சேர வேண்டிய அந்தப் பங்கைக் கொடுத்தேன். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். அந்த 16 ராத்தல் அரிசியையும் விவசாயத்தில் போட்டேன். நல்ல இலாபம் கிடைத்தது. அதன் மூலம் ஒரு மாட்டையும் ஒரு இடையனையும் வாங்கினேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் அவர் எம்மிடம் வந்து அல்லாஹ்வைப் பயந்து கொள். எனக்கு அநீதம் செய்து விடாதே. எனக்கு சேர வேண்டிய உடைமைகளைத் தந்துவிடு என்று கூறினார். அப்போது நான் அதோ தெரிகிறதே அந்த மாடும் அதனருகே நிற்கின்ற இடையனும் உனக்குரிய சொத்துதான் நீர் அவைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றேன். அவரோ நான் அவரை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு என்னைக் கிண்டல் பண்ணாதே என்றார். நான் கிண்டல் பண்ணவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன் என்று கூறி விவரத்தை சொன்னவுடன் அவைகளை எடுத்துச் சென்றுவிட்டார். இறைவா! இந்த நற் செயலை உன் திரு முகத்திற்காக (திருப்பதியைப் பெறுவதற்காக) செய்தேன் என்பதை நீ விளங்கியிருந்தால் அடைப்பட்டிருக்கிற மீதிப் பகுதியையும் சம்பூரணமாக திறக்கச் செய்வாயாக என்றார். உடனே அல்லாஹு தஆலா அந்தப் பாரங்கல்லை முழுமையாக அகற்றி அவர்கள் வெளி வர உதவி செய்தான். (முஸ்லிம் ஷரீப் பாகம் 2 பக்கம் 353 கிதாபுத் திக்ரி, மிஷ்காத் 420 பாபுல் பிர்ரி வஸ்ஸிலாஹ்)

நல்ல மனிதர்களை வஸீலாவாக்குவதற்குரிய ஆதாரங்கள்

1. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் தம்மில் இறை நெருக்கம் பெற்றவர் யார் என்பதைக் கவனித்து அவரைக் கொண்டு வஸீலாவாக்கிய நிலையில் இறைவனை வணங்குவார்களே அப்படிப்பட்டவர்கள். (இஸ்ரா 57, ரூஹுல் மஆனி பாகம் 8 பக்கம் 94)

2. "இறைவா! முஜாஹிர்களாகவும் ஏழைகளாகவும் இருக்கின்ற உனது அடியார்களின் பொருட்டினால் விரோதிகளுக்கு பாதகமாக எங்களுக்கு சாதகமாக உதவி செய்தருள்வாயாக" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். (மிஷ்காத் பக்கம் 447, மிர்காத் பாகம் 10 பக்கம் 13)

3. பஞ்சம் ஏற்பட்டுவிட்டால் நிச்சயமாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு மழை தேடுபவர்களாக ஆகியிருந்தார்கள். அதாவது, இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்களின் நபியை உன்னளவில் (வஸீலாவாக) உதவிச் சாதனமாக ஆக்கிப் பிரார்த்திப்பவர்களாக ஆயிருந்தோம். நீ எங்களுக்கு மழை பொழியச் செய்திருக்கிறாய். மேலும் நிச்சயமாக நாங்கள் எங்கள் நபியின் சிறிய தகப்பனாரைக் கொண்டு (முன்னிலையாக்கி) வஸீலாவாக்கி கேட்கிறோம். மழை பொழியச் செய்வாயாக என்று கூறுவார்கள். உடனே மழை பெய்து விடும். (புகாரி பாகம் 1 பக்கம் 137, மிஷ்காத் 132)

4. "தாபிஈன்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராகும். அவர்களிடம் சென்று உங்களுக்காக பிழை பொறுக்கத் தேடிக் கொள்ளுங்கள்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தமது தோழர்களுக்கு கூறினார்கள். (முஸ்லிம் 6170, மிஷ்காத் 582)

மறைந்தவர்களை வஸீலாவாக்கலாமா?

"இறைவா! உனது நபியின் பொருட்டாலும் எனக்கு முன்னால் உள்ள நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் பாத்திமா பின்த் அஸத் அவர்களின் பாவங்களை மன்னிப்பாத்து அவர்களின் மண்ணறையை விசாலப்படுத்துவாயாக" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆச் செய்தார்கள். (தபரானீ பாகம் 2 பக்கம் 22 கிதாபுல் ஜனாயிஸ்)

கண்ணியம் பெற்ற பொருட்களை வஸீலாவாக்குவதற்குரிய ஆதாரங்கள்

1. இன்னும் அவர்களுடைய நபி அவர்களிடம் நிச்சயமாக அவருடைய அரசுரிமைக்கு அடையாளமாவது ஒரு பேழை உங்களிடம் வருவதாகும். அதில் உங்கள் இரட்சகனிடமிருந்து ஓர் அமைதியும் மூஸாவின் சந்ததியினரும் ஹாரூன் உடைய சந்ததியினரும் விட்டுச் சென்றதில் மீதமுல்லதும் இருக்கும். அதை மலக்குகள் சுமந்து வருவர். நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது என்று கூறினார். (அல்குர்ஆன் 2:248)

மேற்படி பெட்டியினுள் இருந்த பொருட்கள்

அ. மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் ஆடைகள், பாதணிகள், ஊன்று கோல்.
ஆ. ஹாருன் நபியின் தலைப்பாகை.
இ. நபிமார்களின் இதயங்களை கழுவி சுத்தபடுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட தட்டை.
ஈ. நபிமார்களின் உருவப்படங்கள். (தப்ஸீர் ஜலாலைன் பாகம் 1 பக்கம் 38)

இந்தப் பெட்டியை வஸீலாவாக்கி அதன் பரக்கத்தால் போரில் வெற்றியைத் தேடுவார்கள். (ரூஹுல் பயான் பாகம் 1 பக்கம் 385, தப்ஸீர் அபிஸ்ஸுஊத் பாகம் 1 பக்கம் 241)

2. "பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியின் மூலமே போர்களங்கள் அனைத்திலும் வெற்றியடைந்தேன்." என்று காலித் ரலியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார்கள். (முஸ்தத்ரக் பாகம் 3 பக்கம் 299 கிதாபு மஃரிபதிஸ்ஸஹாபா)

திருமுடி வழங்கிய தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மினாவிற்கு வந்து ஜம்ராவில் கல்லெறிந்து விட்டு மினாவில் தங்கியிருக்கும் வீட்டிற்கும் வந்து குர்பானி கொடுத்தார்கள். அதன் பின் முடியெடுப்பதர்க்காக நாவிதரை அழைத்து அவரிடம் தமது வலப்பகுதியைக் கொடுத்தார்கள். பிறகு அபூதல்ஹத்துல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபியை அழைத்து அவர்களிடம் அந்த முடிகளைக் கொடுத்தார்கள். பிறகு இடப்படுதியை நாவிதரிடம் கொடுத்து சிரிக்குமாறு கூறினார்கள். பிறகு அதை அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து இதை மக்களுக்கு மத்தியில் பங்கிட்டு கொடுத்துவிடுவாயாக என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 232)

குறிப்பு : தமது திருமுடிகளை ஸஹாபாக்களுக்கு மத்தியில் பங்கீடு செய்துகொடுக்குமாறு கூறியது அதைவைத்து பரகத் பெற வேண்டும் என்பதற்காகவே அன்றி வேறில்லை என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

திருமுடியை கௌரவித்த ஸஹாபா பெருமக்கள்

ஸைய்யிதுனா முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வபாத்தாகும் நேரத்தில் தாம் பாதுகாத்து வைத்திருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடிகளையும், திரு நகங்களையும், தமது வாயிலும் கண்களிலும் வைத்து தம்மை நல்லடக்கம் பண்ணுமாறு வஸிய்யத் செய்தார்கள். (தாரீகுல் குலபா பக்கம் 185, தாரீகுல் ஆலமில் இஸ்லாமி பக்கம் 49)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திரு முடியின் மூலம் பல போர்களங்களில் வெற்றிவாகை சூடியதாக காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். (முஸ்தத்ரக் பாகம் 3 பக்கம் 299 கிதாபு மஃரிபதிஸ் ஸஹாபா)

குறிப்பு : நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியை ஸஹாபிகள் எந்த அளவுக்கு கௌரவித்துள்ளார்கள் என்பதற்கு மேலதிக விவரங்கள் அறிந்துகொள்ள விரும்புவோர் புகாரி பாகம் 1 பக்கம் 29 கிதாபுல் உழுவு - பாபுல் மாவுல்லதி என்ற பாடத்தில் பாரதக் கொள்ளவும்.