Friday, October 24, 2014

ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு) 

ஆஷீரா நோன்பு (ஆஷூரா பிறை 9 மற்றும் 10)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷீரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் நீங்கள் நோன்பு நோற்கும் இந்நாளின் சிறப்பு என்ன ? என்று கேடட்டார்கள். அதற்கு யூதர்கள் , இது ஒரு புனிதமான நாள், இன்று தான் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தினரையும் (அவர்களது) விரோதிகளான ஃபிர்அவ்ன், அவனது கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றி அவனையும் அவனது கூட்டத்தினரையும் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நாங்கள் நோன்பு வைக்கின்றோம் என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், மூஸா (அலை) அவர்களுக்கு உங்களை விட நானே அதிக உரிமையும், தகுதியும் உடையவன் என்று கூறி விட்டுத் தாமும் நோன்பு நோற்று, பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

ஆஷீரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது , அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். (முஸ்லிம்)

அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: '' நபி(ஸல்) அவர்களிடம் ஆஷீரா நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், '' கடந்த ஒரு வருட பாவங்களுக்கு அது பரிகாரமாகும்'' என்று கூறினார்கள். (முஸ்லிம்)

ஆக முஹர்ரம் மாதம் ஒன்பது மற்றும் பத்தாவது நாட்களில் நோன்பு நோற்பது நபிவழி என அறியலாம்.
அல்லாஹ்வுக்குவிருப்பமானது

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். முஹர்ரம் என்பதன் பொருள் புனிதமானது என்பதாகும். இதனை அல்லாஹ்வின் மாதம் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டது இதன் மகத்துவத்துக்கு இன்னுமொரு சான்றாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரழி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
'' ரமளானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் '' ( முஸ்லிம், அஹ்மத்)

பத்தாம் நாளோடு சேர்த்து ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
1. அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளையும் நோற்பேன் என்றார்கள். (முஸ்லிம்)
2. ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோக்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)
3. ஆஷுரா நாளின் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்கு பின் ஒருநாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறும் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்னறார்கள். (அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி)
அல்லாஹ் மிக நன்கறிந்தவன்.

No comments:

Post a Comment