Wednesday, February 18, 2015

  • இமாம் கஸ்ஸாலி, இமாம் ஜீலானி (ரஹ்) 
  • அந்த வகையில் நினைவுகூரத்தக்க ஆளுமைகள் பலர் இருக்கின்றனர். இக்கட்டுரை ஹி.4ம், 5ம் நூற்றாண்டுகளில் தோற்றம் பெற்ற இரண்டு முக்கியமான ஆளுமைகள் பற்றியும் சமூக சிந்தனை மாற்றத்தில் அவர்களது வகிபாகம் பற்றியும் சுருக்கமாக ஆய்வு செய்கிறது. 
  • கால மாற்றத்துக்கேற்ப எழுகின்ற சவால்களுக்கு அமையவே அக்காலத்தில் தோற்றம் பெறும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனைப் போக்கும் அமைவதுண்டு. அந்த வகையில் ஹி.4ம், 5ம், 6ம் நூற்றாண்டுகளில் முஸ்லிம் உலகுக்கெதிராக தோன்றிய சவால்களாக கீழ்வருவனவற்றை வரையறுக்க முடியும். 
  •            மத்ஹப் முரண்பாடுகள்
  •            சூபித்துவ வழிபிறழ்வுகள்
  •            பாதினீக்களின் தோற்றமும் விளைவும்
  •            தத்துவக்கலை ஏற்படுத்திய சவால்கள்
  •            சிந்தனைக் குழப்பமும் அது முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கமும்
  •            மன்னர்களின் கெடுபிடிகளால் சமூக வாழ்வு சீர்குலைதல்
  •            மேற்சொன்ன சவால்களை சந்தர்ப்பமாகக் கொண்டு சிலுவை வீரர்கள் இஸ்லாமிய உலகை நோக்கிப் படையெடுத்திருந்தமை.
  • இத்தகைய சவால்கள் நிறைந்த காலப் பகுதியில்தான் இருபெரும் ஆளுமைகள் இஸ்லாமிய உலகில் தோன்றினார்கள். 
  • 1.         இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (ஹி. 450-505)
  • 2.         அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) (ஹி.470-563)

  • 1. இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களும் சீர்திருத்தப் பணியும்
  • இவரின் சமகாலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் இமாம் ஜுவைனிஅபூ இஸ்ஹாக் அஷ்- ஷிராஸிஅபுல் காலிம் அல்-குஷைரிஅபூ அலி அல்-பர்னதி ஆகியோர் கலீபா நிளாம் அல்முல்க் ஸ்தாபித்த நிளாமிய்யா பல்ககைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். 
  • இக்காலப் பகுதியில் இமாம் கஸ்ஸாலி பற்றி அறிந்து கொண்ட கலீபா நிளாம்நிளாமிய்யாவில் இணைந்து கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டார். அன்றிலிருந்து அவரின் பணி துரிதமடைந்தது. ஆனாலும் சில வருடங்கள் பணியாற்றிய அவர் அன்று செல்வச் செழிப்பில் மூழ்கி அநியாயத்தில் மூழ்கியிருந்த சமூகத்தைக் கண்டு மனம் வருந்தி கற்பித்தல் பணியிலிருந்து விலகி 10 வருடங்கள் சூபித்துவ வாழ்வு வாழ்ந்தார். 
  • இதன் பின்னரான அவரின் வாழ்வே ஒரு புதிய பாதையை அவருக்குக் காண்பித்தது. விளைவாக அவர் பெரும் சீர்திருத்தவாதியாக மாறினார். இப்பீடிகையுடன் அவரின் சீர்திருத்தப் பணி குறித்து சுருக்கமாக நோக்குவோம். 
  • இமாமவர்கள் தமது பணியை ஆரம்பிக்க முன்னரே சில சமூக சிந்தனையாளர்கள் அகீதாவில் தெளிவை ஏற்படுத்துதல்அரசியல் மாற்றங்களை உண்டுபண்ணுதல் போன்ற அம்சங்களை இலக்காகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தனர். காலத்தின் தேவை கருதி இமாமவர்களது இலக்காகவும் இவ்வம்சங்களே மாறின. 
  • உலகை நோக்காகக் கொண்டு வாழ்ந்த உலமாக்களின் சிந்தனைப் போக்கை மாற்றுவதை இமாமவர்கள் தனது முதற் பணியாகக் கொண்டார்கள். உலமாக்களை நோக்கி இமாம் பேசிய ஒரு கருத்தை மாத்திரம் இங்கே குறிப்பிடுகிறோம். அழிவு தரும் நோய் எனும்போது அது உலக ஆசைதான். இந்நோய் வைத்தியர்களுக்குத்தான் அதிகம் ஏற்பட்டுள்ளது. உங்களை மறந்துவிட்டு சிகிச்சைக்கான வழிமுறையை எங்களுக்குச் சொல்ல வருகிறீர்களே! என்று மக்கள் தம்மிடம் கேட்டு விடுவார்கள் என்ற வெட்கத்தினால் இந்நோயிலிருந்து அவர்களை எச்சரிக்கவும் சக்தியிழந்திருந்தார்கள். இதன் காரணமாக நோய் பரவி வைத்தியர்களை இழந்ததனால் மக்களும் அழிந்து போயினர். மக்களை ஏமாற்றும் ககைளில்தான் வைத்தியர்கள் ஈடுபாடு காட்டினர். உபதேசம் செய்யாவிட்டாலும் குழப்பமாவது ஏற்படுத்தாமல் இருக்கக் கூடாதா! பேசாமல் மௌனமாகவே அவர்கள் இருந்திருக்க வேண்டுமே. இது போன்ற பல கருத்துக்கள் இஹ்யாஉ உலூமித் தீனில் இடம்பெற்றிருக்கின்றன. அத்தோடு
  •            கற்பித்தல்பயிற்றுவித்தலுக்கான புதிய பாட விதானங்களை அமைத்தல்
  •            நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதற்கான முயற்சியைத் துரிதப்படுத்தல்
  •            அநியாயக்கார அரசர்களுக்கெதிராக போராட்டம் நிகழ்த்துதல்
  •            சமூக நீதிக்காக அழைப்பு விடுத்தல்
  •            வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகளை எதிர்த்தல் போன்ற முக்கியமாக பல பணிகளையும் மேற்கொண்டார்கள். 

  • 2. இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் சமூக மாற்றப் பணி
  • அஷ்ஷெய்க் அபுல் ஹஸன் அலி அந்நத்வி (ரஹ்) அவர்கள்இமாம் கஸ்ஸாலியின் சிந்தனையின் விளைவாக முஸ்லிம் சமூகத்தில் பாரிய விழிப்புணர்வு ஏற்பட்டது என்றாலும் நிரப்பப்பட வேண்டிய பாரிய இடைவெளிகள் தொடர்ந்தும் இருந்தன. இவ்வேளை இன்னுமொரு ஆளுமையின் தேவையை சமூகம் உணர்ந்தது. அப்போதுதான் இப்பாரிய ஆளுமை தோன்றியது என இமாம் அப்துல் காதிர் ஜீலானி குறித்து குறிப்பிடுகிறார்கள்.
  • இமாம் கஸ்ஸாலியின் சிந்தனைகள் இயல்பிலேயே மார்க்க உணர்வும் பற்றும் கொண்டிருந்த இமாம் அப்துல் காதிரிலும் பாரிய தாக்கங்களை உண்டுபண்ணின. இரு இமாம்களதும் இலக்குகளும் ஒன்றாகவே அமைந்திருந்தமையால் இருவரது சிந்தனைகளும் கருத்துக்களும் நெருங்கிய தொடர்பு கொண்டவையாக இருப்பதனை அவதானிக்க முடியும். இஹ்யாஉ உலூமுத்தீன் போலவே அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் எழுதிய அல்-குன்யது லிதாலிபீ தரீகில் ஹக் என்ற நூலும் அமைந்திருக்கின்றமை இதற்கு ஆதாரமாக அமைகிறது. 
  • ஹி. 521ல் தனது பணியை ஆரம்பித்த இமாமவர்கள் முதலில் சிறிய கல்விக் கூடம் ஒன்றை அமைத்தார்கள். பின்னர் தேவை கருதி பாரிய தியாகங்களுக்கு மத்தியில் ஹி.528ல் இக்கல்விக்கூடத்தை விசாலிக்கும் பணியை நிறைவு செய்தார்கள். பின்னர் முழு உலகையும் இஸ்லாத்திற்காக பணி புரிய அழைப்பு விடுத்தார்கள். 
  • உலகத்தாரே! முஹம்மத் (ஸல்) அவர்களது மார்க்கத்தின் சுவர்கள் படிப்படியாக வீழ்கின்றன. அதனது அத்திபாரமும் சிதறிப் போகிறது. தகர்ந்து போனதைக் கட்டியெழுப்புவோம்வீழ்ந்து போனதை மீண்டும் நிறுவுவோம். வாருங்கள். இது பூரணப்பட வேண்டிய பணி. சூரியனே! சந்திரனே! பகலே வாருங்கள். 
  • இவ்வாறு விடுக்கப்பட்ட அழைப்பை நோக்கி 70,000க்கும் அதிகமானோர் இமாமவர்களது பாசறையில் ஒன்று கூடினார்கள். 
  • இமாமவர்கள்உலமாக்கள் மறுமையை மறந்திருந்ததைப் பார்த்துமறுமைக்கான பாதையில் வீற்றிருக்கும் உலகத்துக் கொள்ளையர்களே! சத்தியத்தை அறியாதவர்களே! பொதுமக்களுக்கு நீங்கள் செய்த அநியாயத்துக்கு அவசியம் தௌபா செய்ய வேண்டும். அவர்களுக்கு இழைத்த குற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களிடம் எந்த நன்மையும் கிடையாது என்று கூறி எச்சரித்தார்கள்.
  • இன்னுமொரு கருத்தில் உலகம் கரங்களில் இருக்க முடியும். சட்டைப் பையினுள் இருக்க முடியும். நல்லெண்ணத்துடன் அதனை சேமிக்கவும் முடியும். ஆனால்உள்ளத்தில் இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்கள். அத்துடன் அரசியல் தளத்திலும் அநியாயக்கார அரகளுக்கெதிராக சுவரொட்டிகளையும் பதாதைகளையும் ஏந்தினார்கள். வறுமை ஒழிப்புக்காக பாரியதொரு பணியை நிகழ்த்தினார்கள். அயராத முயற்சியில் இறுதி மூச்சுவரை ஈடுபட்டிருந்தார்கள். 

  • மாற்றத்தை நோக்கி முஸ்லிம் உம்மா
  • இக்கட்டுரையின் இறுதிப் பகுதி இரு இமாம்களது இணையற்ற பணியின் விளைவாக முஸ்லிம் உம்மாவில் ஏற்பட்ட எழுச்சி குறித்து சுருக்கமாக ஆராய்கிறது.
  • அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தில் கல்விஅரசியல்சமூகவியல்இராணுவம் போன்ற பல துறைகளிலும் ஆன்மீக ரீதியில் பயிற்றப்பட்ட தவைர்கள் உருவாகியமையை முதலாவது பெரும் விளைவாகக் கொள்ள முடியும். 
  • இப்னு நஜா அல் வாஇழ்அல்-ஹாபிழ் அர்-ரஹாவிஅப்துல் காதிர் ஜீலானியின் மகன் மூஸா மற்றும் இமாம் இப்னு குதாமா போன்ற பெரும் அறிஞர்கள் தோற்றம் பெற்றமை கல்வித் துறை கண்ட முன்னேற்றமாகும். அதுபோலவே நன்கு பயிற்றப்பட்ட ஆன்மீகத் தவைர்கள் தத்தமது பிரதேசங்களில் கல்விப் பாசறைகளை உருவாக்கி பணிபுரிந்தார்கள். கல்வி மற்றும் பயிற்றுவித்தல் துறை கண்ட மிகப் பெரிய அடைவாக இது அமைகிறது. 
  • இந்த வகையில்,
  • 1.         அதவிய்யா - அஷ்ஷெய்க் அதீ பின் முஸாபிர் (சிரியா-திமிஷ்க்)
  • 2.         அஸ்ஸஹ்ரவர்தியா - அஷ்ஷெய்க் அபுந் நஜீப் அப்துல் காஹிர் அஸ்ஸஹ்ரவர்தீ (ஈராக்)
  • 3.         பயானிய்யா - அஷ்ஷெய்க் அபுல் பயான் (திமிஷ்க்)
  • 4.         மத்ரஸதுஷ் ஷெய்க் ரஸ்லான் அல்-ஜஃபரி (திமிஷ்க்)
  • 5.         மத்ரஸது ஹயாது பின் கைஸ் அல்-ஹரானி (சிரியா) 
  • போன்ற 20க்கும் மேற்பட்ட பாசறைகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிட முடியும். 
  • அரசியல் தளத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்த இமாம்களிருவரும் மன்னர்களை அணுகி அவர்களுக்குப் போதனைகள் வழங்குவதிலும் ஆலோசனை வழங்குவதிலும் முனைப்புடன் ஈடுபட்டார்கள். 
  • இமாம் கஸ்ஸாலி அவர்கள்அவரது காலத்தில் பலம் பெற்றிருந்த மன்னர்களான யூசுப் பின் தாஷ்பீன்முஹம்மத் பின் தோமூர்த் ஆகியோரை அணுகி இஸ்லாமிய தேசம் ஒன்றை அமைக்குமாறு தூண்டுதல் அளித்தார்கள். மன்னர்களின் நியமனம் குறித்துக் கூட இமாம் கஸ்ஸாலியிடம் ஆலோசனை பெறப்பட்டது. அதேபோல் இமாம் அப்துல் காதர் அவர்கள் தமது பாசறைக்கு பொதுமக்களும் கல்விமான்களும் அரசர்களும் பல்வேறு தேசங்களில் இருந்து வந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். 400 பெரும் அறிஞர்களும் இமாமவர்களது பாசறையில் இருந்தமை குறிப்பிட்டுக் கூற வேண்டிய அம்சமாகும். இனி முக்கியமானதோர் விளைவு குறித்து நோக்குவோம். 
  • கட்டுரையின் ஆரம்பத்தில் முஸ்லிம் உலகுக்கெதிராக தோன்றிய முக்கிய சவால்களைக் குறிப்பிட்டிருந்தோம். அவற்றுள் சிலுவை வீரர்களின் படையெடுப்பே மிகப் பெரிய சவாலாக இருந்தது. சிலுவை வீரர்களின் இஸ்லாமிய உலகை நோக்கிய நகர்வை ஜிஹாத் புரிந்து பின்வாங்கச் செய்யும் அளவுக்கு முஸ்லிம் உலகு அகீதா ரீதியாக அன்று பலம் பெற்றிருக்கவில்லைஇப் பின்னணியே இரு இமாம்களும் அகீதாவை சீர்திருத்தும் பணியை இலக்காகக் கொண்டமைக்கான காரணமாகும். 
  • இமாம்களின் இம்முயற்சியே ஆக் ஸன்கர் (ஹி.477), இமாதுத்தீன் ஸன்கீநூருத்தீன் ஸன்கீபிக்ஹ் மற்றும் ஹதீஸ் கலைஅறிஞர் அல்- ஹாபிழ் ஸலாஹுத்தீன் அய்யூபி போன்ற தளபதிகளின் வெற்றிக்குப் பின்னால் மறைந்திருந்தது. ஏனெனில்,குறிப்பாக நூருத்தீன் மற்றும் ஸலாஹுத்தீன் படைகளில் ஆலோசகர்களாகபடை வீரர்களாக பணியாற்றியோர் இவ்விரு இமாம்களின் பாசறையில் பயிற்றப்பட்டவர்களே. 
  • கி.பி. 1098 (ஹி.492)ல் ஆக்கிரமிக்கப்பட்ட குத்ஸை ஹி.570 காலப்பகுதியில் ஒரு நூற்றாண்டுக்குள்ளாலேயே சிலுவை வீரர்களிடம் இருந்து மீட்டெடுத்த ஸலாஹுத்தீன் தனது ஆலோசகராக இருந்த அல்-காழி அப்துர் ரஹீம் பின் அலி குறித்து நான் இத்தேசத்தை எனது வாளினால் வெற்றி பெறவில்லைநிச்சயமாக அல்காழி அவர்களது ஆலோசனையினாலேயே வெற்றி பெற்றேன். அவர் தனது அரசியல் சாணக்கியத்துடன் மிகுந்த பேணுதல் உள்ளவராக இருந்தார். அதிகமாக நோன்பு நோற்பவராகவும்தொழுபவராகவும் குர்ஆன் ஓதுபவராகவும் இருந்தார். பணிவுள்ளவராகவும் நோயாளிகளைத் தரிசிப்பவராகவும் ஏழைகளுக்கு உதவி புரிபவராகவும் இருந்தார் என்று குறிப்பிடுவதன் மூலம் எத்தகைய ஆளுமைகள் அப்பாசறையில் உருப்பெற்றிருக்கின்றன என்பதை ஊகிக்க முடிகிறது. 
  • எனவேதான் நேற்றைய கனவுகள் இன்றைய யதார்த்தங்கள் என்று இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) குறிப்பிடுவது போல இரு இமாம்களின் பணிமுஸ்லிம் சமூகத்தை ஈற்றில் வெற்றிப் பாதைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. மட்டுமன்றிபுதிய பரம்பரையொன்றையும் உருவாக்கியது. 
  • உண்மையில் இன்றைய 21ம் நூற்றாண்டின் பேசுபொருளாக மாறியிருக்கும் இஸ்லாம் கிட்டிய எதிர்காலத்துக்குள் சர்வதேச தலைமை பீடத்தை ஏற்க வேண்டுமெனின் இமாம் கஸ்ஸாலிஇமாம் அப்துல் காதிர் ஜீலானி போன்ற இமாம்களின் பணியையும்தியாகத்தையும் செய்பவர்களாக எமது அறிஞர்களும் தவைர்களும் மாற வேண்டும். பிற்கால சமூகத்தை வழி நடத்தும் தவைர்களையும் சிந்தனையாளர்களையும் உருவாக்கும் பணியில் முழு முஸ்லிம் உம்மாவும் மிக வினயமாக ஈடுபட வேண்டும். 

  • அல்-குர்ஆனினதும் நபி (ஸல்) அவர்களது போதனைகளையும் கடைப்பிடித்து வாழும் மனிதர்கள் நிறைந்த தூய தேசமொன்றை உருவாக்க வேண்டும். அப்போதுதான் எமது இன்றைய கனவுகள் நாளை யதார்த்தங்களாய் மாறும் எனும் யதார்த்தத்தை இதனூடாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Saturday, January 31, 2015



மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் வாழ்க்கை வரலாறு!!


மாபெரும் தவசீலர், மெய்நிலை கண்ட ஞானி, சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி, சுல்தானுல் அவ்லியா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் உலக முஸ்லிம்கள் அனைவராலும் போற்றிக் கொண்டாப்படும் ஒரு உன்னத மகான் ஆவார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் கூட மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்து அவர்களை போற்றுகிறார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை எனலாம். “காதிரியா தரீகா” என்னும் ஆத்மீக பள்ளியை உருவாக்கிய செம்மல் இவர்கள். இதன் மூலம் எத்தனையோ இறைநேசர்களை உருவாக்கி, மனிதர்களை புனிதர்களாக ஆகிய மாபெரும் மகான். அவர்களின் சிறப்பான சொற்பொழிவால் பல லட்சக்கணக்கான மக்களை புனித இஸ்லாத்திற்குள் கொண்டு வந்த வள்ளல். இப்படிபட்ட உத்தமரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவது மிக முக்கியமானது. 
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் 11 வது தலைமுறையில் பிறந்த பேரப்பிள்ளையாவார்கள். இவர்களின் தந்தையாரின் பெயர் ஸைய்யது அபூ ஸாலிஹ் இப்னு மூஸா ( رضي الله عنه) தாயாரின் பெயர் உம்முல் கைர் என்னும் அமத்துல் ஜப்பார் என்பதாகும். இவர்களின் தந்தையார் ஒரு ஸூஃபி மகானாகவும், தாயார் சிறந்த தக்வாவுடைவர்களாகவும் விளங்கினார்கள். மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தந்தைவழியில் ஹஸனியாகவும் தாய்வழியில் ஹுஸைனியாகவும் விளங்குகிறார்கள். 
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் குழந்தை பருவத்திலேயே கல்வியில் சிறப்புற்று விளங்கினார்கள். ஏனைய மாணவர்கள் மனனஞ் செய்ய ஒரு வாரம் பிடிக்கும் ஒரு பாடத்தை இவர்கள் ஒரே நாளில் மனனஞ் செய்து விடுவார்கள். தனது உயர்தர கல்வியை பக்தாதுக்கு சென்று அங்கு பிரபலமாக இருந்த மாபெரும் அறிஞர்களிடம் கற்றார்கள். தப்ஸீரிலும், ஹதீஸிலும், ஃபிக்ஹு பாடங்களிலும் சிறந்து விளங்கினார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் பிரபலமாக இருந்த மார்க்க அறிஞர்களிடம் சென்று கல்வி கற்றார்கள். இவர்களின் ஆசிரியர்களாக விளங்கியவர்கள் அபூ ஸையீதினில் முபாரக் பின் அலி முகர்ரமி, அபுல் உபா அல பின் ஹகீம், அபூ காலிப் அஹ்மது, அபுல் காஸிம் அலி, அபூ ஸகரிய்யா யஹ்யா தப்ரேஸி رضي الله عنه போன்றவர்கள். இவர்களிடம் எல்லா விதமான மார்க்க கல்வியை கற்று, தம் ஆத்ம சக்தியாலும், சிந்தனையாலும் குர்ஆனின் விளக்கங்களை புரிந்துக் கொண்டார்கள். ஏழு ஆண்டு காலம் விடா முயற்சியுடன் கல்வி பயின்று பக்தாத் சர்வ கலாசாலையின் உயர்தர பரீட்சையில் ஹிஜ்ரி 496 துல்ஹஜ் மாதம் தேர்ச்சி பெற்றார்கள். 
எல்லா விதமான கல்வியையும் கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்பதையும் அதுவே தன்னை அல்லாஹ்விடம் நெருங்கச்செய்யும் வழி என்றும் உணர்ந்தார்கள். எனவே தனக்கு ஆத்மீக வழிக்காட்ட ஒரு ஞானகுருவை தந்தருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். அப்பொழுது இறைவன் அவர்களுக்கு ஷைகு ஹம்மாத் என்னும் மார்க்க பெரியாரை தேர்ந்தெடுத்து கொடுத்தான். அந்த ஷைக் அவர்கள் கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்களுக்கு பலவகையான ஆத்மீக ஞானங்களை கற்றுக்கொடுத்தார்கள். பல கடுமையான சோதனைகளை செய்தார்கள். எனினும் கௌஸுல் அஃலம் அவர்கள் சகிப்புதன்மையுடனும் திட நம்பிக்கையில் மலையாகவும் விளங்கினார்கள். பின் மூன்று ஆண்டுகளில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆத்மா ஞானத்தில் தேர்ச்சி பெற்றார்கள். அப்போது ஷைகு ஹம்மாத் அவர்கள், ” இந்த அஜமி அப்துல் காதிர் வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார். தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார். இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள்” என்று கூறினார்கள். 
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தனது ஆத்மீக கல்வியை நிறைவு செய்த பின் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கி சென்றார்கள். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம செய்தார்கள். அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றை கொடுப்பார். அதை அணிந்துக்கொண்டே நாட்களை போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும், முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள். ஒரு வருஷம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் குடிக்காமல் தவம் செய்தார்கள். மறு ஆண்டில் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல், எதுவும் சாப்பிடாமல், தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் வுளுவுடன் சுபஹ் தொழுகையையும் தொழுதார்கள். அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுக்கொண்டு அருகிலுள்ள ஒரு தூணில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படி செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்பொழுது பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபஹ் தொழுகையையும் தொழுவார்கள். ஸுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட கடும் தவம்! அதனாலேயே அவர்களுக்கு மாபெரும் தவசீலர், மெய் நிலை கண்ட ஞானி என்று பல பட்டங்கள் ஏற்பட்டன. கடமையான தொழுகைகளை முறைப்படி முடித்துக் கொண்டு அவர்கள் நபில் தொழுகையின் மூலமும், குர்ஆனைப் பற்றி சிந்தனையில் இருப்பார்கள். இவ்விதமான கடும் தவத்தில் அவர்கள் இருந்த போது பல நபிமார்களுக்கும், மகான்களுக்கும் வழிக்காட்டிய ஸைய்யதுனா கிழ்று (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவர்கள் தனது அபாரமான கடும் தவத்தாலும், முயற்சியாலும் சிறப்பான ஆத்மீக படித்தரங்களை அடைந்தார்கள். 
ஹிஜ்ரி 521 ஷவ்வால் 11ம் இரவன்று கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்களின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தோன்றி, “அப்துல் காதிரே! வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்” எனக் கேட்டார்கள். அதைக் கேட்டு திடுக்கிட்ட கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள், “யா ரசூலல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான் அரபி இல்லையே! அஜமிதானே. எனவேதான் அரபிகளின் நகரத்தில் அரபு மொழியில் பேச தயங்குகிறேன்” என்று கூறினார்கள். இந்த பதிலைக்கேட்ட அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சிரித்த முகத்துடன் கௌஸு நாயகத்தின் வாயை திறக்கச்சொல்லி 7 தடவை தங்களின் முபாரக்கான எச்சிலை துப்பினார்கள். அதற்கு பிறகு கௌஸு அஃலத்தின் திருவாயிலிருந்து ஞானப்போதனைகளும், மார்க்க பயான்களும் வெளிவரத்தொடங்கியது. அவர்களின் பயானைக்கேட்க பல ஊர்களிலிருந்து முஸ்லிம்கள் கூட்டம், கூட்டமாக பக்தாத்துக்கு வரத்தொடங்கினார்கள். கௌஸு நாயகம் رضي الله عنه இஸ்லாத்திற்கு செய்த சேவையால் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் நேர்வழிப்பெற்றார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களின் முரீதாகி அவ்லியாக்கள் ஆனார்கள். அவர்களின் ஒரு பயானுக்கு 70 ஆயிரம் பேர்கள் கூடி பயான் கேட்டார்கள். பயானை கேட்டதும் மட்டுமல்ல அதை தங்கள் வாழ்க்கையில் எடுத்தும் நடந்தார்கள். மக்கள் தன் உள்ளங்களை பரிசுத்தப்படுத்தி நல்லவர்களாக வாழவே கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள் காதிரியா தரீக்காவை உருவாக்கினார்கள். திக்ருகளையும், நபில் தொழுகைகளையும் போதித்தார்கள். ஒவ்வொரு ஹாஜத்துகளையும் அடைய தன் முரீதுகளுக்கு திக்ரு முறைகளை சொல்லி கொடுத்தார்கள். அவர்கள் இவைகளை தொகுத்து கொடுத்த கிதாபிற்கு “ராத்திப்” என்று பெயர் கூறப்படுகிறது. இந்த ராத்திப்புகளையே இன்றும் காதிரி தரீக்காவை பின்பற்றுவோர் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும், தக்கியாக்களிலும் ஓதி வருகிறார்கள். 
ஸைய்யதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் ஒரு முறை ஒரு தெரு வழியாக வரும்போது, வழியில் பலஹீனமான வயோதிகர் ஒருவர் அமர்ந்திருந்தார். கௌஸுல் அஃலம் அவர்களை கண்ட அவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார், அதற்கு அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பிறகு அவர், தம்மை தூக்கி நிறுத்தும்படி கேட்டுகொண்டார். கௌஸுல் அஃலம் அவர்கள் அவரை தூக்கி நிறுத்தினார்கள். உடனே அவர் தம் முதுமை நீங்கி வாலிபராக மாறினார். இதைக்கண்டு திடுக்கிட்ட கௌஸுல் அஃலம் அவர்களிடம் அவர் சொன்னார்: ” நான்தான் தீன் என்னும் சன்மார்க்கமாகும், நீங்கள் இந்த தீனை ஹயாத்தாக்கிய முஹ்யித்தீன் ஆவீர்கள்.” என்று கூறி மறைந்தார். இவ்வாறு கூறி மறைந்தவர் ஒரு மலக்கு ஆவார். 
கௌஸுல் அஃலம் அவர்களின் 89ம் வயதில் ஒரு மகத்துவமிக்க சம்பவம் நடந்தது. அல்லாஹ்வின் உத்தரவு ஒன்று அவர்களுக்கு வந்து அதை அவர்கள் மக்களுக்கு கூறினார்கள் : ” எனது பாதம் எல்லா வலிமார்களின் தோளின் மேல் இருக்கிறது” என்று கூறியபோது உலகம் முழுவதிலும் இருந்த வலிமார்கள் அனைவர்களும் தமது ஆத்ம காதுகளால் கேட்டார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் கௌஸு அஃலம் அவர்களின் பாதத்தை தங்கள் தோள் மீது ஏற்பதாக கூறினார்கள். 
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தமது வாலிப வயதில் ஆத்மீக கல்வி கற்பதிலும், தவத்திலும் ஈடுபட்டு விட்டதால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் ஹிஜ்ரி 521ல் நபிகள் நாயகம் (ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கௌஸுல் அஃலம் அவர்களின் கனவில் தோன்றி திருமணம் செய்து கொள்ளுமாறும், அதுவே உங்களுடைய ஆத்ம ஞானம் சம்பூரணமடைய அவசியமும் ஆகும் என்றார்கள். அதையொட்டி அவர்கள் திருமணம் செய்தார்கள். தமது 51ம் வயதில் நான்கு மனைவிமார்களை மணந்து 27 ஆண் குழந்தைகளையும், 22 பெண் குழந்தைகளையும் மொத்தம் 49 குழந்தைகளை பெற்றார்கள். இவர்களின் ஆண் மக்கள் சிறந்த கல்விமான்களாகவும், வலிமார்களாகவும் ஆனார்கள். அதில் சிலர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இஸ்லாமிய தஃவா பணியை சிறப்பாக செய்தார்கள். 
40 ஆண்டுகள் சன்மார்க்க பிரசாரம் புரிந்த மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தங்கள் பூத உடலைவிட்டு மறையும் நேரம் வந்தது. அதை லௌஹுல் மஹ்பூல் என்னும் ஏட்டில் அவர்களால் பார்க்க முடிந்தது.
கௌஸுல் அஃலம் அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்தபொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களை பார்க்க வந்துக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள். பிறகு கௌஸுல் அஃலம் அவர்கள் குளித்துவிட்டு இஷா தொழுகையை தொழுதார்கள். நீண்டநேரம் ஸுஜூதில் இருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும் தன் முரீதுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள். ஸுஜூதிலிருந்து அவர்கள் தலையை உயர்தியதும் ” சாந்தியடைந்த ஆத்மாவே! உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக. என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாக” என்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது. கடைசி நேரம் வந்துவிட்டதை உணர்ந்த கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்கள் தன் வாயால் திருக்கலிமாவை கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோடு தன் 91வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்கள். அல்லாஹ்வின்பால் அண்மித்துவிட்ட அவர்களுக்கு மரணமேது!!!